ஆன்மிகம்

சம்பந்தருக்கு முத்துப்பந்தல் + "||" + Muthu panthal for sampanthar

சம்பந்தருக்கு முத்துப்பந்தல்

சம்பந்தருக்கு முத்துப்பந்தல்
கும்பகோணம் அருகே உள்ளது பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயம். ‘பட்டி’ என்ற பசு வழிபட்ட தலம் என்பதால் இது பட்டீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.
கும்பகோணம் அருகே உள்ளது பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயம். ‘பட்டி’ என்ற பசு வழிபட்ட தலம் என்பதால் இது பட்டீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தல இறைவன் தேனுபுரீஸ்வரர். இறைவி ஞானாம்பிகை. தன்னை தரிசிக்க வரும் சிறுவன் திருஞானசம்பந்தர் வெயிலில் நடப்பதை பொறுத்திடாத சிவபெருமான், பூத கணங்களை அனுப்பி, முத்துப்பந்தலை பிடிக்கச் செய்து, அதன் நிழலில் நடந்து வரச் செய்த திருத்தலம் இதுவாகும். அப்படி திருஞான சம்பந்தர் நடந்து வரும் அழகைக் காண்பதற்காக, சிவபெருமான் தன் முன்பாக இருந்த நந்தியை விலகி இருக்க உத்தர விட்டார். இந்த ஆலயத்தில் உள்ள நந்தி, சிவன் சன்னிதிக்கு நேரே சற்று விலகி இருப்பதை இன்றும் காணலாம்.

இது தவிர விஸ்வாமித்திர மகரிஷி, இந்த தலத்தில்தான் பிரம்மரிஷி பட்டம் பெற்றார். இங்குள்ள துர்க்கை அம்மன், பக்தர்களுக்கு சகல நன்மை
களையும் வழங்கி அருள்புரிகிறார்.