சுகம் தரும் சூரிய வழிபாடு


சுகம் தரும் சூரிய வழிபாடு
x
தினத்தந்தி 13 Jun 2017 10:06 AM GMT (Updated: 13 Jun 2017 10:05 AM GMT)

எதிரிகள் அருகில் வராமல் இருக்கவும், வெற்றியை வரவழைத்துக் கொள்ளவும் சூரிய வழிபாடு நமக்கு உகந்ததாக அமையும்.

நவக்கிரகங்களில் ராஜகிரகமாக விளங்குபவர் சூரியன். இவரை வழிபடும் போது தினமும் ‘சூரிய காயத்ரி’ சொல்வதன் மூலம் எதிரிகள் விலகுவர். எதிரிகள் அருகில் வராமல் இருக்கவும், வெற்றியை வரவழைத்துக் கொள்ளவும் இந்த சூரிய வழிபாடு நமக்கு உகந்ததாக அமையும். ராம பிரான் சூரிய வழிபாடு செய்ததுடன், ஆதித்தய ஹிருதய ஸ்தோத்திரத்தால் தினமும் சூரியனை பாராயணம் செய்து வந்தார். அதன் மூலம் ராவணனை சம்ஹாரம் செய்து ராமாயணப் போரில் வெற்றி கண்டார். பஞ்சபாண்டவர்கள் சூரியனை வழிபட்டதன் மூலமாக, அட்சய பாத்திரத்தைப் பெற்றனர். சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் துன்பங்களை எதிர்த்து போராடும் ஆற்றல் நமக்குக் கிடைக்கும்.

Next Story