ஆன்மிகத் துளிகள்


ஆன்மிகத் துளிகள்
x
தினத்தந்தி 20 Jun 2017 6:00 AM IST (Updated: 19 Jun 2017 4:23 PM IST)
t-max-icont-min-icon

இறைவனைக் காட்டிலும் அவனுடைய மாயைக்கு வலிமை அதிகம். அதில் இருந்து விடுபடவே அனைவரும் விரும்புகின்றனர்.

மாயை

இறைவனைக் காட்டிலும் அவனுடைய மாயைக்கு வலிமை அதிகம். அதில் இருந்து விடுபடவே அனைவரும் விரும்புகின்றனர். அனைத்தும் அறிந்த நாரத முனிவர் கூட இறைவனிடம், தூய பக்தியையும், இறைவனின் மாயையில் மூழ்காமல் இருக்கும் வரத்தையுமே கேட்கிறார். உலகை மயக்கும் இந்த மாயை எல்லோரையும் வசீகரித்து தனக்கு அடிமையாக்கி விடுகிறது.

–ஸ்ரீராமகிருஷ்ணர்.


ஆதாரம்

சந்தேகம் என்பதற்கு எல்லையே கிடையாது. ஒருவரிடம் எழும் சந்தேகத்தைத் தீர்ப்பதால் மட்டும் பயனில்லை. ஒரு சந்தேகத்தைத் தீர்த்தால், மற்றொரு சந்தேகம் எழுந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் சந்தேகப்படுபவரும், அந்த சந்தேகத்திற்கான ஆதாரமும் கண்டுபிடிக்கப்பட்டால், எல்லாச் சந்தேகங்களும் நீங்கி தெளிவு பிறக்கும்.

–ரமணர்.


உறுதி

நம் நாட்டுக்கு இப்போது வேண்டியது இரும்பைப் போன்ற தசைகளும், உருக்கைப் போன்ற நரம்   புகளும், எதனாலும் தடைபடாத, உலகின் விந்தை           களையும், மறைபொருட்     களையும் ஊடுருவிப் பார்க்கவும், கடலின் அடிவரை செல்ல நேரிட்டாலும் எவ்வாறாயினும் கருதியதை முடிக்கும் ஆற்றல் பெற்ற மனங்கள் தான்.

–விவேகானந்தர்.

1 More update

Next Story