காகத்திற்கு சோறு வைப்பதன் ரகசியம்


காகத்திற்கு சோறு வைப்பதன் ரகசியம்
x
தினத்தந்தி 20 Jun 2017 12:30 AM GMT (Updated: 19 Jun 2017 11:05 AM GMT)

காகத்திற்கு சோறு வையுங்கள். தேக நலன் சீராகும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. சனி பகவானின் வாகனம் என்பது மட்டுமே அதற்கு காரணம் அல்ல.

காகத்திற்கு சோறு வையுங்கள்.  தேக நலன் சீராகும் என்று  ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. சனி பகவானின் வாகனம் என்பது மட்டுமே அதற்கு காரணம் அல்ல. வேறு ஒரு காரணமும் அதற்கு இருக்கிறது. சுற்றுப்புற சுகாதாரத்தை வளப்படுத்துவது காகம்தான். இதனை நாம் அனுபவத்தில் உணர முடியும். காலை நேரத்தில் சாதம் வைத்து காகத்தை நாம் அழைக்கும் பொழுது, அது பறந்து வந்து வீட்டின் மேற் கூரையிலோ, மரக்கிளைகளிலோ வந்து அமர்கிறது. அப்போது அந்த பகுதியில் பல்லி, பாச்சை, எலி போன்றவை இறந்து கிடந்தால் அவற்றைக் கொத்தித் தின்று அப்புறப்படுத்துகிறது.

இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறது. நோய்க்கிருமிகள் நம்மைத் தாக்காதிருக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் காகத்திற்கு உணவளிக்கும் பொழுது, ஒரு காகம் தன் கூட்டத்தையே அழைத்து உணவை பகிர்ந்து கொள்கின்றன. இதனைப் பார்க்கும் பொழுது நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் நமக்கு வருகிறது.

நமது ஆயுளை நீடித்துக் கொள்ள உதவும் விதத்தில், சுகாதாரத்தைக் காப்பாற்றும் காகத்தை ஆயுள்காரகன் சனிக்கு வாகனமாக அர்ப்பணித்திருப்பது எவ்வளவு பொருத்தமானதாக அமைந்துள்ளது.

ஏழரைச் சனி, அஷ்டமத்துச்சனி, அர்த்தாஷ்டமச் சனி நடப்பவர்கள் காகத்திற்கு அன்னம் வைத்து அதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம்.


Next Story