குழந்தைகளுக்கான நேர்த்திக்கடன்
நாகப்பட்டினம் பெருமாள் கீழ வீதியில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் நடைபெறும் ‘செடில் உற்சவம்’ என்ற திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றதாகும்.
நாகப்பட்டினம் பெருமாள் கீழ வீதியில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் நடைபெறும் ‘செடில் உற்சவம்’ என்ற திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உற்சவத்தின் போது நாகப்பட்டினம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். குழந்தைகளுக்காக செய்யப்படும் இந்த நேர்த்திக் கடன் மிகவும் வித்தியாசமானதாகும்.
‘செடில்’ என்பது ஒரு வகை மரத்தினால் செய்யப்பட்டது. ஒரு நிலை தாங்கியின் மீது பெரிய மரத்தை இணைத்து, மரத்தின் உச்சியில் 2 பேர் நிற்கும் அளவுக்கு செவ்வக வடிவில் ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள். அந்த செவ்வக அமைப்பிற்குள் கோவில் பூசாரி ஏறி நின்று கொள்வார். அவரிடம் செடில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், தங்களின் குழந்தையைக் கொடுப்பார்கள். பூசாரி குழந்தையைப் பிடித்துக் கொள்வார். தொடர்ந்து செடில் மரத்தின் அடிப்பகுதியை மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் சுற்றுவார்கள். அப்படி சுற்றி முடித்ததும் நேர்த்திக்கடன் முடிவடையும். குழந்தையை இறக்கி பெற்றோரிடம் கொடுத்து விடுவார்கள்.
இந்த நேர்த்திக்கடன் செலுத்துவதால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், அவர்களுக்கு எந்த நோயும் தாக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
நாகப்பட்டினம் ரெயில் நிலையத்தில் இருந்து ½ கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.

Related Tags :
Next Story