ஆன்மிகம்

எண்ணங்களை நிறைவேற்றும் மலர்கள் + "||" + Flowers that perform thoughts

எண்ணங்களை நிறைவேற்றும் மலர்கள்

எண்ணங்களை நிறைவேற்றும் மலர்கள்
தெய்வ வழிபாட்டிற்கென்று எண்ணற்ற மலர்கள் இருந்தாலும், அவைகளில் நம் எண்ணங்களை நிறைவேற்றும் மலர்களைத் தேர்ந்தெடுத்து பூஜை செய்தால் தெய்வத்தின் அருள் எளிதில் கிடைக்கும்.
தெய்வ வழிபாட்டிற்கென்று எண்ணற்ற மலர்கள் இருந்தாலும், அவைகளில் நம் எண்ணங்களை நிறைவேற்றும் மலர்களைத் தேர்ந்தெடுத்து பூஜை செய்தால் தெய்வத்தின் அருள் எளிதில் கிடைக்கும்.

மனோரஞ்சித மலரை இறை வழிபாட்டிற்குப் பயன்படுத்தினால், தம்பதியர்களுக்குள் ஒற்றுமை உண்டாகும்.

மனக்கவலை தீர வேண்டுமானால், மகிழ்ச்சி அதிகரிக்க வேண்டுமானால் வெண்தாமரை மலரை பூஜைகளில் சேர்க்கலாம்.

நந்தியாவட்டை, மல்லிகை போன்ற மலரைப் பயன்படுத்தினால் மன அமைதி கிடைக்கும்.

பாரிஜாத மலரைப் பயன்படுத்தினால் ஆயுள் விருத்தி அதிகரிக்கும்.

வில்வம், துளசி போன்றவைகளைப் பயன்படுத்தினால் வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும்.

மரிக்கொழுந்தைப் பயன்படுத்தினால் புகழ் பெருகும்.