குருவிற்குரிய வழிபாட்டு தலங்கள்


குருவிற்குரிய வழிபாட்டு தலங்கள்
x

குரு பீடமென்று அழைக்கப் படுகிறது. ஆறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று. கடலோரத்தில் அமைந்த இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானையும், குரு பகவானையும் வழிபடுவது நல்லது.

திருச்செந்தூர்: குரு பீடமென்று அழைக்கப் படுகிறது. ஆறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று. கடலோரத்தில் அமைந்த இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானையும், குரு பகவானையும் வழிபடுவது நல்லது.

தென்குடி திட்டை: கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள குரு, ராஜயோக குருவாக தனிச்சன்னிதியில் காட்சி அளிக்கிறார்.

பட்டமங்கலம்: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில், குரு பகவான் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த கோலத்தோடு காட்சி தருகிறார்.

திருவாலிதாயம்: சென்னையை அடுத்த பாடி, முகப்பேறு அருகில் உள்ளது. இங்குள்ள குரு சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறார்.

குருவித்துறை: மதுரை மாவட்டம், சோழவந்தானுக்கு அருகில் உள்ளது. இங்குள்ள பெருமாள் கோவிலில் சிறப்பாக காட்சி தருகிறார் குருபகவான்.

தக்கோலம்: அரக்கோணத்தில் இருந்து காஞ்சீ புரம் செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி கலைநயத்தோடு காணப் படுகிறார்.

ஆலங்குடி: திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆலங்குடியில் தெற்கு நோக்கி வீற்றிருந்து தனி சன்னிதியில் குரு பகவான் அருள்பாலிக்கிறார்.

இன்னும் தமிழகத்தின் பல இடங் களிலும் குருபகவான் வீற்றிருந்து அருள் வழங்குகிறார். அனைத்து ஊர்களிலும் உள்ள சிவாலயங்களிலும் நவக்கிரகத்தில் குரு வீற்றிருப்பார். அது மட்டுமில்லாமல் தனி சன்னிதியில் தட்சிணாமூர்த்தியாகவும் இடம் பெற்றிருப்பார்.

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். எனவே நன்மைகள் நம்மை நாடி வர, நாம் அருகிலிருக்கும் ஆலயத்தில் உள்ள குருவை வழிபடுவோம். குதூகலத்தை பெறுவோம்.

Next Story