ஆன்மிகத்துளிகள்


ஆன்மிகத்துளிகள்
x
தினத்தந்தி 29 Aug 2017 6:00 AM IST (Updated: 28 Aug 2017 6:47 PM IST)
t-max-icont-min-icon

காலையில் உதயமாகும் சூரியன் இரவின் இருளை அகற்றுவது போல் ஆன்ம ஞானம் எல்லா மன மயக்கங்களையும் ஓட்டு கிறது.

ஞானம்

காலையில் உதயமாகும் சூரியன் இரவின் இருளை அகற்றுவது போல் ஆன்ம ஞானம் எல்லா மன மயக்கங்களையும் ஓட்டு கிறது. எதிலும் பற்றற்றவர் களுக்கே ஞான யோகம் கைகூடும். ஏனெனில் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பதை உணர்ந்து, அவர்கள் செயலைத் துறந்திருக்கிறார்கள்.

–ஸ்ரீகிருஷ்ணர்.

தூக்கம்

தியானிக்கும் போது தூக்கம் வருகிறது என்கிறீர்கள். தூங்க ஆரம்பித்து விட்டால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் விழித்திருக்கும் போது எல்லா எண்ணங்களில் இருந்தும் விலகியிருக்க முயற்சி செய்யுங்கள். தூங்குவதற்கு முன்னர் உள்ள நிலை தூங்கி விழித்த பின் தொடரும். தூங்கத் தொடங்கும் போது எங்கே விட்டீர் களோ, அங்கே தொடருவீர்கள்.

–ரமணர்.

சேவை

உங்கள் அனைவரிடமும் நான் வேண்டுவது ஒன்றே. உங்களின் தற்பெருமையை வளர்ப்பதையும், பிரிவு மனப்பான்மையையும், பொறாமையையும் என்றைக்கும் ஒழித்து விட வேண்டும். உங்களால் இதை செய்ய முடியுமானால் உலகமே உங்கள் காலடியில் அமரும். கீழ்ப்படிந்து நடப்பது என்ற நற்குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

–விவேகானந்தர்.
1 More update

Next Story