இந்த வார விசே‌ஷங்கள் : 29–8–2017 முதல் 4–9–2017 வரை


இந்த வார விசே‌ஷங்கள் : 29–8–2017 முதல் 4–9–2017 வரை
x
தினத்தந்தி 29 Aug 2017 12:30 AM GMT (Updated: 28 Aug 2017 2:10 PM GMT)

மதுரை சொக்கநாதர் உலாவாய் கோட்டை அருளிய திருவிளையாடல், நந்தீஸ்வரர் யாழி வாகனத்தில் பவனி.

29–ந் தேதி (செவ்வாய்)

    மதுரை சொக்கநாதர் உலாவாய் கோட்டை அருளிய திருவிளையாடல், நந்தீஸ்வரர் யாழி வாகனத்தில் பவனி.

    விருதுநகர் சொக்க       நாதர் யானை வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.

    குறுக்குத்துறை முருகப்பெருமான் திருவீதி உலா.

    சமநோக்கு நாள்.

30–ந் தேதி (புதன்)


    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை.

    குறுக்குத்துறை முருகப்பெருமான் பவனி வரும் காட்சி.

    விருதுநகர் சொக்க      நாதர் குதிரை வாகனத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.

    சமநோக்கு நாள்.

31–ந் தேதி (வியாழன்)


    முகூர்த்த நாள்.

    திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிர மணிய சுவாமி மயில் வாகனத்தில் வீதி உலா.

    திருநெல்வேலி தொண்டர் நயினார் கோவிலில் கரூர் சித்தரால் திருநெல்வேலிக்கு ஏற்பட்ட சாப நிவர்த்தி விழா.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளையல் விற்ற திரு  விளையாடல்,இரவு சுவா மிக்கு பட்டாபிஷேகம், சுவாமி–அம்பாள் தங்கப் பல்லக்கில் பவனி.

    விருதுநகர் சொக்க      நாதர்– அம்பாள் விருட்ச சேவை.

    கீழ்நோக்கு நாள்.

1–ந் தேதி (வெள்ளி)


    திருப்பரங்குன்றம்         முருகப்பெருமானும், திருவாதவூர் மாணிக்கவாசகரும் மதுரை எழுந்தருளல்.

    மதுரை சொக்கநாதர் நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல், தங்கக் குதிரையில் பவனி வரும் காட்சி.

    விருதுநகர் சொக்க         நாதர் நந்தி வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.

    குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.

    ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    கீழ்நோக்கு நாள்.

2–ந் தேதி (சனி)

    பக்ரீத் பண்டிகை.

    சர்வ ஏகாதசி.

    திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிர மணிய சுவாமி கோவிலில் அதிகாலை சண் முகர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச் சப்பரம்.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்தருளிய லீலை, சுவாமி–அம்பாள் விருசபாரூட தரி       சனம்.

    ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.

    விருதுநகர் சொக்க       நாதர் யானை வாகனத்திலும், அம்மன் புஷ்பப் பல்லக்கிலும் திருவீதி உலா.

    திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.

    கீழ்நோக்கு நாள்.

3–ந் தேதி (ஞாயிறு)


    முகூர்த்த நாள்.

    பிரதோ‌ஷம்.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் விறகு விற்ற திருவிளை யாடல், சுவாமி–அம்மன் தங்கச் சப்பரத்தில் திருவீதி உலா.

    விருதுநகர் சொக்க      நாதர் கோவிலில் ரத உற்சவம்.

    உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு.

    சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

    மேல்நோக்கு நாள்.

4–ந் தேதி (திங்கள்)

    முகூர்த்த நாள்.

    ஓணம் பண்டிகை.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சட்டத்தேரில் பவனி.

    விருதுநகர் சொக்கந£தர் கோவிலில் சுவாமி–அம்பாள் ரி‌ஷப வாகனத்தில் திருவீதி உலா.

    கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

    மேல்நோக்கு நாள்.

Next Story