ஆன்மிகத் துளிகள்


ஆன்மிகத் துளிகள்
x
தினத்தந்தி 5 Sept 2017 12:52 PM IST (Updated: 5 Sept 2017 12:52 PM IST)
t-max-icont-min-icon

எப்படி இடைவிடாமல் ஆத்ம சிந்தனை செய்வது என்று கூறுகிறேன். வேதம் உபதேசிப்பது இதைத்தான்.

சிந்தனை

ப்படி இடைவிடாமல் ஆத்ம சிந்தனை செய்வது என்று கூறுகிறேன். வேதம் உபதேசிப்பது இதைத்தான். தனிமையில் உள்ள ஓர் இடத்துக்குச் சென்று புலன்களை அடக்கு. தீய எண்ணம் எதற்கும் இடம் கொடுத்து விடாமல், ஆத்மாவைப் பற்றியே ஆழ்ந்து சிந்தனை செய். இவ்விதம் சிந்தித்து எங்கும் நிறைந்துள்ள ஆத்மாவில் உலகத்தை நீ மூழ்கும்படி செய்ய வேண்டும்.

-ராமர்.

நிலையாமை

ஆகாசத்தைப் போல் நான் உள்ளேயும் வெளியேயும் நிரம்பி நிற்கிறேன். மாறுபடாமல் அனைத்திலும் ஒன்றேயாய், பரிசுத்தமாய், பற்றற்று மாசற்று நான் இருக் கிறேன். குணங்களும் செயலும் இன்றி என்றும் உள்ளவனாய், பரிசுத்தவனாய், அழுக்கும் ஆசையும் அற்றவனாய், மாறுபாடற்றவனாய், வடிவற்றவனாய், எப்பொழுதும் முக்தனாய் இருக்கிறேன் நான்.

-ஆதிசங்கரர்.

இசை

ந்தப் பிரபஞ்சத்தின் உயிர்த் துடிப்பான இறைவன், தன் மகிமையைத் தானே இசைத்துக் கொண்டிருக்கிறான். ஆதியந்தமற்ற, இடையீடற்ற அந்த சங்கீதத்தையே, அழியக்கூடிய இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளிலும் நீ கேட் கிறாய். மரங்களும், மலைகளும், பறவைகளும் அவன் புகழைப் பாடிக்கொண்டிருக்கின்றன. அதைக் கேட்பதற்கான காதுகளைப் பெற்றவன் புண்ணியவான்.

-சாரதாதேவி.


Next Story