ஆன்மிகம்

வாரம் ஒரு அதிசயம் : பளிங்கு கோவில் + "||" + Week is a wonder: the marble temple

வாரம் ஒரு அதிசயம் : பளிங்கு கோவில்

வாரம் ஒரு அதிசயம் : பளிங்கு   கோவில்
தாய்லாந்தில் அமைந்திருக்கும் பளிங்கு கோவில் தான் இந்த வாரம் அதிசயம். ஓவியரின் கலைநயத்தில் மிளிரும் இந்த பளிங்கு கோவிலில் சாந்த சொரூபியாக புத்தர் வீற்றிருக்கிறார்.
தாய்லாந்தில் அமைந்திருக்கும் பளிங்கு கோவில் தான் இந்த வாரம் அதிசயம். ஓவியரின் கலைநயத்தில் மிளிரும் இந்த பளிங்கு கோவிலில் சாந்த சொரூபியாக புத்தர் வீற்றிருக்கிறார். கோவிலின் கட்டமைப்பு, பக்தர் களின் கண்களை கூச செய்கிறது. ஏனெனில் அகதூய்மையையும், புறதூய்மையையும் வலியுறுத்தி புத்தருக்காக பளபளக்கும் பளிங்கு கற்களால் கோவிலை கட்டியிருக்கிறார்கள். கோவிலின் மேற்கூரை முதல்,  புத்தர் சிலை வரை அனைத்துமே வெள்ளை நிறத்தில் பளபளக்கிறது. அதனால் கடவுள் பக்தி இல்லாதவர்களும், பளிங்கு கோவிலை ரசிக்கிறார்கள்.