ஆன்மிகத் துளிகள்


ஆன்மிகத் துளிகள்
x
தினத்தந்தி 26 Sep 2017 1:00 AM GMT (Updated: 25 Sep 2017 10:20 AM GMT)

ஆன்மிகப் பயிற்சி உபாசனை எனப்படும். உபாசனை இன்றி ஆன்ம சித்தி இல்லை. இது நிச்சயம்

ஞானம்

ஆன்மிகப் பயிற்சி உபாசனை எனப்படும். உபாசனை இன்றி ஆன்ம சித்தி இல்லை. இது நிச்சயம். பயிற்சியின் போது அனுபவிக்கப்படும் நமது இயற்கை நிலையே உபாசனை. அது தடைபடாமல் அடையப்படும் போது, ஞானம் எனப்படும்.

–ரமணர்.

நாகரிகம்

மத வெறியும், அதன் விளைவாக ஏற்படும் ரத்தக் களறியும் அடங்காதவரை எந்த ஒரு நாகரிகமும் வளர்ச்சி அடைய முடியாது. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதன் மூலமே மனித நாகரிகம் என்பது தொடங்குகிறது எனலாம்.

–விவேகானந்தர்.

அன்பு

நீ தெய்வீக அன்பை வெளிப்படுத்த வேண்டுமென்றால், தெய்வீக அன்பை ஏற்கும் திறன் உனக்கு இருக்க வேண்டும். ஏனெனில் தெய்வீக அன்பின் இயல்பான, சொந்த இயக்கத்திற்குத் திறந்திருக்கக் கூடிய இயல்பைக் கொண்டவர்களால் மட்டுமே அதை வெளிப்படுத்த முடியும்.

–ஸ்ரீஅன்னை.

Next Story