ஆன்மிகம்

சேலம் செவ்வாய்பேட்டையில் சிறப்பு அலங்காரத்தில் வெங்கடாஜலபதி + "||" + Special outfit Venkateshwara

சேலம் செவ்வாய்பேட்டையில் சிறப்பு அலங்காரத்தில் வெங்கடாஜலபதி

சேலம் செவ்வாய்பேட்டையில் சிறப்பு அலங்காரத்தில் வெங்கடாஜலபதி
சேலம் செவ்வாய்பேட்டை வெங்கட்ராமன் தெருவில், அலங்கார பந்தலில் ஸ்ரீவெங்கடாஜலபதி நண்பர்கள் குழு சார்பில் 10–ம் ஆண்டு விழாவையொட்டி

சேலம்,

நேற்று அலமேலு மங்கை தாயார் சமேதமாக வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. பொதுமக்கள் திரளாக கூடி வழிபட்டனர்.

மேலும் அங்குள்ள அலங்கார பந்தலில் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமண, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி அவதாரங்களும் மற்றும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், ஆஞ்சநேயர், கருடாழ்வார், ராமனுஜர் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. காலை 6 மணிக்கு கணபதி சிறப்பு ஹோமமும் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு அலமேலு மங்கை தாயாருடன் வெங்கடாஜலபதி விஸ்வரூப தரிசனம் நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2–வது நாளாகவும் அலங்கார பந்தலில் வெங்கடாஜலபதி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.