ஆன்மிகம்

வில்வத்தின் மகிமை + "||" + The glory of Vilva

வில்வத்தின் மகிமை

வில்வத்தின் மகிமை
வில்வ மரத்தை வழிபட்டால், வெற்றிகள் வீடு தேடி வரும். பொதுவாகவே விருட்சங்களை வழிபட்டால் நமது வருத்தங்கள் குறையும்.
வில்வ மரத்தை வழிபட்டால், வெற்றிகள் வீடு தேடி வரும். பொதுவாகவே விருட்சங்களை வழிபட்டால் நமது வருத்தங்கள் குறையும். அதிலும் வில்வம் சிவனுக்கு உகந்தது. சிவபெருமானை, வில்வ இலையால் அர்ச்சிப்பது மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதால் அசுவமேத யாகம் செய்த பலனும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும் கிடைக்கும். தவிர புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் கிடைக்கப்பெறும். வில்வத்தால் சிவனுக்கு தொடர்ந்து அர்ச்சனை செய்து வந்தால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வந்து சேரும்.