வாரம் ஒரு அதிசயம்


வாரம் ஒரு அதிசயம்
x
தினத்தந்தி 31 Oct 2017 7:24 AM GMT (Updated: 31 Oct 2017 7:24 AM GMT)

கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும்.

ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும். அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலே இருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது. அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட கிணறு அது.

மேலும் இந்த ஆலயத்தின் கருவறை சுவர்களில் மரகத கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாம். அதனால் வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும். அதேபோல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. 

Next Story