அபிஷேக நீரை என்ன செய்வது?
இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேக நீரை பலரும் பாட்டிலில் பிடித்துச் செல்வதை நாம் பார்த்திருப்போம்.
கோவில்களில் மூலஸ்தானத்தில் இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேக நீர் வெளியேறுவதற்கு, கருவறைக்கு வெளியே ஒரு வழி இருக்கும். அதன் வழியாக வரும் அபிஷேக நீரை பலரும் பாட்டிலில் பிடித்துச் செல்வதை நாம் பார்த்திருப்போம். பலர் அந்த நீரை வலது கையால் பிடித்து, தலையில் தெளித்துக் கொள்வார்கள். அபிஷேக நீர் கருவறையில் உள்ள இறைவன் திருமேனியில் பட்டு புனிதமடைவதுடன், அந்நீரில் இறைவன் உடன் உறையும் தேவ கணங்களின் ஆசிகளும் கலந்திருக்கும் என்பது ஐதீகம். எனவே அந்த நீரை வீணாக்காமல், நம் வீடுகளிலோ, அலுவலகங்களிலோ தெளித்து வழிபாடு செய்து வளங்களைப் பெறலாம்.
Related Tags :
Next Story