ஆன்மிகம்

இந்த வாரம் விசேஷங்கள் : 7-11-2017 முதல் 13-11-2017 வரை + "||" + ccasions this week From 7-11-2017 to 13-11-2017

இந்த வாரம் விசேஷங்கள் : 7-11-2017 முதல் 13-11-2017 வரை

இந்த வாரம் விசேஷங்கள் : 7-11-2017 முதல் 13-11-2017 வரை
7-ந் தேதி (செவ்வாய்) * சங்கடஹர சதுர்த்தி. * மாயவரம் கவுரிநாதர் கடைமுக உற்சவ ஆரம்பம். * திருநெல்வேலி காந்திமதி அம்மன் இந்திர விமானம். * தென்காசி உலகம்மை ஆலயத்தில் சுவாமி புறப்பாடு.
7-ந் தேதி (செவ்வாய்)

* சங்கடஹர சதுர்த்தி.

* மாயவரம் கவுரிநாதர் கடைமுக உற்சவ ஆரம்பம்.

* திருநெல்வேலி காந்திமதி அம்மன் இந்திர விமானம்.

* தென்காசி உலகம்மை ஆலயத்தில் சுவாமி புறப்பாடு.

* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் புறப்பாடு, சிறப்பு அபிஷேகம்.

* சமநோக்கு நாள்.

8-ந் தேதி (புதன்)

* திருநெல்வேலி காந்திமதி அம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா.

* திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு.

* வீரவநல்லூர் மரகதாம்பிகை பவனி வரும் காட்சி.

* மாயவரம் கவுரி மாயூரநாதர் புறப்பாடு கண்டருளல்.

* மேல்நோக்கு நாள்.

9-ந் தேதி (வியாழன்)

* முகூர்த்த நாள்.

* திருநெல்வேலி காந்திமதி அம்மன் தவழும் கண்ணன் அலங்காரத்துடன் இரவு காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.

* திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் சந்திர பிரபையில் பவனி வரும் காட்சி.

* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.

* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் பஞ்சமூர்த்தி களுடன் பவனி.

* சமநோக்கு நாள்.

10-ந் தேதி (வெள்ளி)

* திருநெல்வேலி காந்திமதி அம்மன் கோலாட்ட அலங்காரம், இரவு தங்க கிளி வாகனத்தில் பவனி.

* கோவில்பட்டி செண்பக வள்ளியம்மன் திருவீதி உலா.

* திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் சேஷ வாகனத்தில் வலம் வரும் காட்சி.

* மாயவரம் கவுரி மயூரநாதர் பவனி.

* மேல்நோக்கு நாள்.

11-ந் தேதி (சனி)

* மாயவரம் கவுரிநாதர் ரிஷப வாகனத்தில் உலா.

* திருநெல்வேலி காந்திமதி அம்மன் மாலை சிவபூஜை செய்தல், இரவு சப்தாவர்ண பல்லக்கில் வீதி உலா.

* தூத்துக்குடி பாகம்பிரியாள் பவனி வரும் காட்சி.

* திருஇந்துளூர் பரிமள ரங்க ராஜர் கருட வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

* கீழ்நோக்கு நாள்.

12-ந் தேதி (ஞாயிறு)

* திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் அனுமன் வாகனத்தில் புறப்பாடு.

* கோவில்பட்டி செண்பக வள்ளியம்மன் பவனி வரும் காட்சி.

* மாயவரம் கவுரி மாயூரநாதர் திருவீதி உலா.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

* கீழ்நோக்கு நாள்.

13-ந் தேதி (திங்கள்)

* திருநெல்வேலி காந்திமதி அம்மன் அதிகாலை தபசுக் காட்சி.

* தென்காசி, தூத்துக்குடி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, வீரவநல்லூர் ஆகிய தலங்களில் அம்மன் திருக்கல்யாணம்.

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

* திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் யானை வாகனத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.