ஆன்மிகம்

பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா + "||" + Polichalur At the temple of the agatheeswarar Sanipeyarchi Festival

பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா

பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா
பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.

திருநள்ளாருக்கு அடுத்து இந்த கோவிலில் சனி பகவான் தனியாக எழுந்தருளி இருப்பதால் இந்த கோவில் பொழிசை வட திருநள்ளாறு என அழைக்கப்படுகிறது.

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று இந்த கோவிலில் சனி தோ‌ஷ நிவர்த்தி பரிகார பூஜை நடைபெற்றது.

அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது. அதனை தொடர்ந்து, சனி தோ‌ஷ நிவர்த்தி பரிகார ஹோமமும், லட்சார்ச்சனையும் நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று பூஜையில் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பக்தர்கள் பெருந்திரளாக திரண்டு சனி பகவானை தரிசனம் செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
2. விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் வருசாபிஷேக விழா திரளான பக்தர்கள் தரிசனம்
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
3. நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி திரளான பக்தர்கள் தரிசனம்
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4. திருச்செந்தூர் கோவிலில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் வீதி உலா கடலில் புனித நீராடி பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
5. குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி 21-ந் தேதி நடக்கிறது
குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் காவிரிக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி வரும் 21-ந் தேதி நடக்கிறது.