அகத்தியர் உருவாக்கிய ஸ்ரீசக்கரம்


அகத்தியர் உருவாக்கிய ஸ்ரீசக்கரம்
x
தினத்தந்தி 2 Jan 2018 5:40 AM GMT (Updated: 2 Jan 2018 5:39 AM GMT)

மாங்கனிநகர் எனப் பெயர் பெற்ற சேலம் நகரத்தில் இருந்து ராசிபுரம் செல்லும் வழியான திருச்சி ரோட்டிலுள்ள சீலநாயக்கன்பட்டியில் அமைந்திருக்கும் அற்புதமான ஆன்மிகத் தலம் தான் ஸ்தல மலை எனும் ஊத்து மலை.

-சேலம் சுபா.

கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலசுப் ரமணியரின் கருணை ததும்பும் அழகுத் திருமுகம், அங்கு வரும் அனைத்துப் பக்தர் களின் துயரங் களையும் அடியோடு நீக்கி நிம்மதியைத் தரும். அமைதியான சூழலில், பசுமையான மரங்கள் சாமரம் வீச, சித்தர் பெரு மான்களின் சுவாசம் நிறைந்த ஊத்துமலையின் சிறப்பு அம்சமாகத் திகழ்கிறது, அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீசக்கரம்.

அகிலமெங்கும் ஆட்சி புரிந்து சகல சுபீட்சத்தையும் வாரி வழங்குகின்றன அம்மனின் அம்சமான ஸ்ரீசக்கரம். முனிவர்களில் மாமுனிவரான அகத்தியரால், ஊத்துமலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஸ்ரீசக்கரம், ஸ்ரீசக்கர தேவியாக இருந்து அருள்பாலிக்கிறது.

புராணக் கதையின்படி (5 ஆயிரம் வருடங் களுக்கு முன்) தாழ்ந்திருந்த தென்னாட்டை உயர்த்தும் பொருட்டு, சிவபெருமானின் கட்டளையை ஏற்று, அகத்தியர் பொதிகை மலை நோக்கி விஜயம் செய்தார். அப்போது, அமைதி கொஞ்சும் இவ்வனத்தைக் கண்டு, இங்கேயே ஆசிரமம் அமைத்து எம்பெருமானை வழிபட்டார். அகத்தியர் மட்டுமின்றி சித்தரில் சிறந்தவரான போகர், புலிப்பாணி, கபிலர், ரேணுகர் ஆகிய பஞ்சாச்சாரியார்கள் (ஐவர்), இங்குள்ள குகையில் அமர்ந்து தவம் செய்து வழிபட்ட தலம் என்பதால் இத்தலத்தின் சிறப்பு சொல்லில் அடங்காது.

இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம், சகல தோஷங்களையும் போக்கித் தனம் தரும், சக்ரமஹா காலபைரவரின் பிரமாண்ட திரு உருவம். ஸ்ரீசக்கரம் அமைந்திருக்கும் ரத்தினக் கோட்டையின் ஆவரண தேவதையாக.. அதாவது காக்கும் தெய்வமாக அமைந் திருக்கிறார் இந்த கால பைரவர்.

அகத்தியரால் பாறையில் செங்குத்து நிலையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் சர்வரோக ஹா சக்கரம் ஆக அமைந்துள்ளது. அதாவது மனிதனின் சகலவிதமான நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை கொண்ட மகா சக்கரம் இது. முறைப் படி இச்சக்கரத்தைப் பூஜித்து வருபவர் களின் வாழ்வில் வரும் இன்னல்கள் தீர்த்து சகல சவு பாக் கியம் கிடைக்கும். அகத்தியருடன் இணைந்து அவ ருடைய மனைவி லோபா முத்ரா மாதா வும் இங்கு வழி பாடு செய்துள்ளார்.

அகத்தியர் பெரு மான் ஸ்ரீவித்யா ரகசியங்களை சித்தர் களுக்கு உபதேசித்த அற்புத தலம் இது. முக்கியமாக முனிவர் களுக்கும், சித்தர் களுக்கும் ‘ககண மார்க்கப் பிரயோகம்’ எனும் வான் வெளியில் சஞ்சரிக் கும் அற்புதமான மந் திரத்தை உபதேசித் ததால் இன்றும் நம்மிடையே கண் ணுக்குத் தெரியாமல் சித்தர்கள் வலம் வந்து நமக்கு நன்மைகளை செய்து வருவது இத்தலத்தின் சிறப்பு.

ஸ்ரீசக்கரம் உள்ள பாறையை அடுத்துள்ள குகையில் அகத்தியர் மற்றும் போகர் முதலான சித்தர்கள் அமர்ந்து தவம் செய்தனர். இங்கு அவர்களால் உருவாக்கப்பட்ட மூலிகை ஊற்றுநீர், இன்று வற்றாத மூலிகை நீராக மக்களின் நோய்களைத் தீர்த்துக் கொண்டுள்ளது. மேலும் சப்தசாகரம் என்றழைக்கப்படும் ஏழுவிதமான மூலிகைகள் கலந்த சுனைகள், தோல் நோய்கள், நுரையீரல் பாதிப்பு போன்ற பலவிதமான நோய்களைப் போக்கும் ஆற்றலுடையதாக திகழ்கிறது.

இங்கு அமைந்துள்ள காலபைரவர் சன்னிதி, சகல தோஷங்களையும் நீக்கும் சக்தி கொண்டது. கால பைரவரின் சிலை தமிழ் நாட்டிலேயே இங்குதான் பெரியதாக உள்ளது. எட்டுக்கை களுடன், அமைதி தவழும் முகத்துடன் காலபைரவர் காட்சி தருகிறார். தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வேண் டித் தொழுதால் அவர் அருளைப் பெறலாம். காலபைரவருக்கு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடக்கும் சிறப்பு கலச பூஜை, வலம்புரி சங்கு அபிஷேகம், ஆகர்ஷண பைரவர் பூஜை, சகஸ்ரநாமம் அர்ச்சனை, குருஜி பூஜை, லட்சார்ச்சனை, புஷ்ப அபிஷேகம், 108 கலச பூஜை, ருத்ராட்ச பூஜை ஆகியவற்றில் கலந்து கொண்டு, தோஷம் நீங்கி சுபீட்சம் பெறலாம்.

ஆலய தல விருட்சங்களாக நாவல் மரமும், அரசமரமும், மருதமரமும் உள்ளன.

Next Story