ஆன்மிகம்

உழைத்து வாழ வேண்டும் + "||" + islam

உழைத்து வாழ வேண்டும்

உழைத்து வாழ வேண்டும்
தனி மனிதனின் உயர்வுக்கும், ஒரு நாட்டின் உயர்வுக்கும் உழைப்பே மூலதனம்.
“தனி மனிதனின் உயர்வுக்கும், ஒரு நாட்டின் உயர்வுக்கும் உழைப்பே மூலதனம். இயற்கை வளம் இல்லாத பல நாடுகள், மனித வளத்தின் மூலமாக முன்னேற்றம் கண்டுள் ளன. மாறாக இயற்கை எல்லா வளங்களை அருளியிருந் தும், மனித வளம் இல்லாமையால் பல நாடுகள் பின் தங்கியுள் ளன. நாம் எத்தனை பொருளாதாரத் திட்டங் களைத் தீட்டினாலும், மக்களிடை யே நேர்மை, கடின உழைப்பு, பணித்தி றன் இல்லையாயின் பெரிய மாற்றம் எதுவும் நிகழாது”

ஒரு தோழர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களி டம், “இறைத்தூதரே! எனக்கு நீங்கள் உதவ வேண்டும்; குழந்தைகளுக்கு உணவளிக்க வீட்டில் எதுவும் இல்லை” என்றார்.

நபிகள் நாயகம்: விற்பனை செய்வதற்காக உம்மிடத்தில் பொருள் ஏதும் உண்டா?

தோழர்: என்னிடம் ஒரு படுக்கை விரிப்பு மட்டுமே உள்ளது. அதில் ஒரு பாதியைப் படுக் கையாகவும், மீதியைப் போர்வையாகவும் பயன்படுத்துகிறேன். தண்ணீர் குடிப்பதற்கான ஒரு குவளையும் என்னிடம் உள்ளது.

நபிகள் நாயகம்: இவ்விரண்டையும் கொண்டு வாரும்.

நபித் தோழர் அப்பொருட்களைக் கொண்டு வந்ததும், தமது தோழர்களை நோக்கி, “இப்பொருட்களை விலைக்கு வாங்குவோர் யாரும் உண்டா?” என்று கேட்டார்கள்.

ஒரு தோழர், “நான் ஒரு திர்ஹமிற்கு வாங்கிக் கொள்கிறேன்” என்றார்.

இன்னொரு தோழரோ, “நான் இரண்டு திர்ஹம் தருகிறேன்” என்றார்.

நபிகள் நாயகம் அதை இரண்டு திர்ஹமிற்கு விற்று, அதை உதவி கேட்டு வந்தவரிடம் கொடுத்து, “இதில் ஒரு திர்ஹமை உம்முடைய குழந்தைகளுக்கு உணவு வாங்க வைத்துக் கொள்ளும்; இன்னொரு திர்ஹத்தைக் கொண்டு கயிறும் கோடரியும் வாங்கி வருவீ ராக!” என்று கூறினார்கள்.

தோழர் வாங்கி வந்த கோடரிக்கு, தம் கரங் களாலேயே பிடியும் அமைத்துக் கொடுத்தார் கள் நபிகள் நாயகம். பின் “இவற்றைக் கொண்டு மரங்களை வெட்டி, நகரத்தில் விற்று பிழைப்பீ ராக” என்று கூறினார்கள்.

அந்த நபித்தோழர், நபிகள் நாயகம் கூறியவாறு செய்தார். பதினைந்து நாட்களுக்குப் பின்னர் பத்து திர்ஹத்துடன் திரும்பினார்.

“இறைத்தூதரே! நீங்கள் சொன்ன நாளில் இருந்து நீங்கள் சொன்னபடியே விறகு வெட்டி விற்றேன். இப்போது எனது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்த பின்னரும் பத்து திர்ஹம்கள் உள்ளன” என்றார்.

நபிகள் நாயகம், “உமது குழந்தைகளுக்குத் துணியும், உணவும் வாங்கிக் கொள்வீராக!” என்றார்கள்.

“பிச்சை எடுப்பதனால் மறுமையில் நெற்றியில் ஏற்படும் அவமானச் சின்னத்தை விட, இது (உழைப்பு) சிறந்ததல்லவா?” என்று கேட்டார் கள்.

இதனைக் கேட்ட மற்ற நபித் தோழர் கள், “இனி நாங்கள் எவரிடமும், எதற்காகவும் கையேந்த மாட்டோம்; கடினமாக உழைப்போம்” என்று உறுதியளித்தார்கள். (நூல்: அபூ தாவூத், திர்மிதி)

*பள்ளிவாசலில் ஒருவர் எப் போதும் வழிபாடுகளில் திளைத் திருந் தார். இதனைக் கண்ணுற்ற நபியவர்கள், “இவருக்கு உண வளிப் பது யார்?” என்று வினவினார்கள்.

“இவரது சகோதரரே இவருக்கு உதவுகிறார்” என்று தோழர்கள் பதில் அளித்தார்கள். இதனைக் கேட்ட நபிகளார், “இவரை விட அவரே சிறந் தவர்” என்றார்கள்.

* ஒரு நபித்தோழர், நபிகளாரைக் காண வந்தார். அவரை உட்காரச் சொல்லி, அவரது கரங்களை உற்று நோக்கினார்கள். தோழரின் கைகளில் கறுப்புக் கொப்பளங்கள் இருந்தன. கறுப்பு மையினால் அவரது கரத்தில் ஏதோ எழுதப் பட்டது போன்று காணப்பட்டது. “உமது கரங்களில் என்ன எழுதப்பட்டுள்ளது” என்று நபிகள் நாயகம் வினவினார்கள்.

அத்தோழர் சிரித்து விட்டு, “இவை எழுத்துகள் அல்ல; கொப்பளங்கள். நான் ஒரு தொழிலாளி. சுத்தியலால் பெரிய கற்களை உடைத்து அவற்றை அள்ளிப் போடுகிறேன். அதனாலேயே இக்கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளன” என்றார். நபிகளார் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, அவரை அருகில் அழைத்து, அவர் கரங்களை முத்த மிட் டார்கள்.

நபிகளாரின் இந்த செயல்கள் நமக்குப் பல உண்மைகளை உணர்த்துகிறது.

*உழைக்கும் திறனுள்ளவர்கள் பிச்சை எடுப் பதை இழிவாகக் கருத வேண்டும். பிச்சை கேட்க வருபவர்களை உழைக்குமாறு தூண்ட வேண்டும்.

* உழைக்காமல் வழிபாடுகளில் ஈடுபடுவது எந்த வகையிலும் சிறந்ததல்ல. உழைக்க வேண்டிய நேரத்தில் உழைக்க வேண்டும். வணங்க வேண்டிய சமயத்தில் வணங்க வேண்டும்.

* உழைக்காதவர்கள், இம்மையிலும், மறுமையிலும் இழிநிலையை அடைவார்கள்.

*தவறான முறையில் பொருளீட்டுவதைத் தவிர, எந்தத் தொழிலும் இழிவானதல்ல.

* கடின உழைப்பைப் போற்றவும், மதிக்கவும் வேண்டும்.

தனி மனிதனின் உயர்வுக்கும், ஒரு நாட்டின் உயர்வுக்கும் உழைப்பே மூலதனம். இயற்கை வளம் இல்லாத பல நாடுகள், மனித வளத் தின் மூலமாக முன்னேற்றம் கண்டுள்ளன. மாறாக இயற்கை எல்லா வளங்களை அருளியிருந் தும், மனித வளம் இல்லாமையால் பல நாடுகள் பின் தங்கியுள்ளன. நாம் எத்தனை பொருளா தாரத் திட்டங்களைத் தீட்டினாலும், மக்க ளிடையே நேர்மை, கடின உழைப்பு, பணித்தி றன் இல்லையாயின் பெரிய மாற்றம் எதுவும் நிகழாது.

உழைப்பின் மேன்மை குறித்து, நபிகளார் கூறிய கருத்துகள்:

*தமது கரங்களால் உழைத்து பெற்ற செல் வத்தில் இருந்து உண்ணுவதை விட சிறந்த உணவு எதுவும் இல்லை. ( நூல்: புகாரி)

* எவரிடத்திலும், எதற்காகவும் கையேந்து வதில்லை என்ற உறுதிமொழியை எவரேனும் எனக்கு அளித்தால், நான் அவர் சொர்க்கம் செல்வதற்கான உறுதிமொழியை அளிக் கிறேன். (நூல்: அபூ தாவூத்)

* வசதி படைத்தோரும், உடல் வலிமை உள்ளோரும் தர்மம் பெற அனுமதியில்லை.