செங்கதிரோன் வழிபாடு
பொங்கல் தினத்தன்று சூரியனைப் பார்த்து கீழ்கண்ட பாடலைப் பாடினால் வாழ்க்கை வளமாகும்.
பொங்கல் தினத்தன்று சூரியனைப் பார்த்து நாம் வழிபடும் பொழுதும், மற்ற நாட்களில் காலை நேரத்தில் சூரிய உதயத்தின் பொழுதும், கீழ்கண்ட பாடலைப் பாடினால் வாழ்க்கை வளமாகும். ஆற்றல் பெருகும். திறமைகள் பளிச்சிடும். எதிர்காலம் பிரகாசமாக அமையும். நவக்கிரகங்களில் ராஜகிரகம் என்று கருதப்படும் சூரியன், பயிர்கள் தளைக்கவும், உயிர்கள் வாழவும் வழிவகுக்கும். செங்கதிரவனை உத்ராயண காலத் தில் தை முதல் நாள் வழிபடுவது சிறப்பாகும்.
சுகத்தைக் கொடுக்கும் சூரியா போற்றி!
செல்வம் வழங்கும் செங்கதிர் போற்றி!
நலங்களை வழங்கும் ஞாயிறே போற்றி!
ஆற்றலை வழங்கும் ஆதவா போற்றி!
நவக்கிரகத்தின் நாயகா போற்றி!
நாளும் வரம் தரும் கதிரவா போற்றி!
என்று துதிப்பாடல்களைப் பாடினால் வாழ்க்கை வளமாகும்; வசதிகள் பெருகும்.
Related Tags :
Next Story