ஆன்மிகம்

அம்பாளை வணங்குவதன் பலன் + "||" + benefits of worshiping Ampal

அம்பாளை வணங்குவதன் பலன்

அம்பாளை வணங்குவதன் பலன்
அன்னையின் பெயர்களுக்கு முன்பாக ‘ஜெய்’ என்ற வார்த்தையை சேர்த்து உச்சரித்தால், வாழ்வில் முன்னேற்றம் வந்து சேரும்.
ன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். அன்னை எந்த பெயரால் அழைக்கப்பட்டாலும், அவளின் செயல்பாடு பக்தர்களுக்கு நன்மை அளிப்பதே. அன்னையின் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு ஸ்லோகங்கள் இருக்கின்றன. அன்னையின் பெயர்களுக்கு முன்பாக ‘ஜெய்’ என்ற வார்த்தையை சேர்த்து உச்சரித்தால், வாழ்வில் முன்னேற்றம் வந்து சேரும். சில பெயர்களைச் சொல்வதால் கிடைக்கும் பலன்களை இங்கே பார்க்கலாம்.

ஜெய் காளி - எதிரிகளின் பயம் ஒழியும்

ஜெய் சண்டிகாதேவி - செல்வம் சேரும்

ஜெய் சாம்பவி - அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.

ஜெய் துர்க்கா - ஏழ்மை அகலும், துன்பம் விலகும், போரில் வெற்றி கிடைக்கும், மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.

ஜெய் சுபத்ரா - விருப்பங்கள் நிறைவேறும்

ஜெய் ரோகிணி - நோய் தீரும்.