நான்கு ஜாம வழிபாடு
இறைவழிபாட்டில் பின்பற்றப்படும் நான்கு ஜாம வழிபாட்டு முறைகள்:
முதல் ஜாமம்:- பஞ்சகவ்யம் என்று கூறப்படும் பால், தயிர், நெய், கோமியம், கோசலம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, வில்வ மாலை சாத்தி, தாமரை பூக்கொண்டு அர்ச்சனை செய்து, பயத்தம் பருப்பு சேர்ந்த பொங்கலை இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த முதல் ஜாம பூஜையில் ரிக் வேதம் ஓத வேண்டும்.
இரண்டாம் ஜாமம்:- பஞ்சாமிர்தம் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். பின்னர் சந்தனமும், தாமரைப் பூவும் சாத்தி, துளசியால் அர்ச்சித்து, பாயசம் நைவேத்தியம் படைக்க வேண்டும். இந்த ஜாம பூஜையில் யஜூர் வேதம் ஓதுதல் வேண்டும்.
மூன்றாம் ஜாமம்:- இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்து, அரைத்த கற்பூரத்துடன் சாதிமுல்லைப் பூவை சாத்தி வழிபட வேண்டும். மேலும் மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து அன்னம் நைவேத்தியம் செய்து, சாம வேதம் ஓத வேண்டும்.
நான்காம் ஜாமம்:- சிவபெருமானுக்கு கரும்பு சாறு அபிஷேகம் செய்ய வேண்டும். அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியாவட்டைப் பூவும் சாத்தி, நீலோற்பலப் பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும். அப்போது இறைவனுக்கு அன்னம் நைவேத்தியம் படைத்து, அதர்வண வேதத்தை ஓதுதல் முறையாகும்.
Related Tags :
Next Story