ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் + "||" + Occasions this week

இந்த வார விசேஷங்கள்

இந்த வார விசேஷங்கள்
6-ந் தேதி (செவ்வாய்) குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் அம்மன் திருமாலை உற்சவம். ராமேஸ்வரம் ராமநாதர் பரமோற்சுவ ஆரம்பம். இரவு சுவாமி தங்க நந்தி வாகனம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் உற்சவம்.
6-2-2018 முதல் 12-2-2018 வரை

6-ந் தேதி (செவ்வாய்)

குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் அம்மன் திருமாலை உற்சவம்.

ராமேஸ்வரம் ராமநாதர் பரமோற்சுவ ஆரம்பம். இரவு சுவாமி தங்க நந்தி வாகனம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் உற்சவம்.

7-ந் தேதி (புதன்)

ராமேஸ்வரம் ராமநாதர் வெள்ளி கற்பக விருசப வாகனத்திலும் அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் புறப்பாடு.

திருவில்லிப்புத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு கண்டருளல்.

8-ந் தேதி (வியாழன்)

திருநீலகண்ட நாயனார்-தாயுமானவ அடிகள் குருபூஜைகள்.

ராமேஸ்வரம் ராமநாதர் வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் பவனி.

காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருகோகர்ணம், திருவைகாவூர் தலங்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.

ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

திருச்சேறை சாரநாதர் இரவு தெப்போற்சவம்.

9-ந் தேதி (வெள்ளி)

எட்டெழுத்துப் பெருமாள் தருமபதி வருசாபிசேகம்.

சங்கரன்கோவில் கோமதி அம்மன் தெப்பம்.

ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் பவனி.

திருகோகர்ணம் சிவபெருமான் புறப்பாடு.

ராமேஸ்வரம் ராமநாதர் வெள்ளி கயிலாச வாகனத்திலும், அம்பாள் தங்க சிம்மாசனத்திலும் காட்சி தருகிறார்.

திருத்தணி முருகன் கிளிவாகன சேவை.

காளஹஸ்தி சிவபெருமான் விருசப வாகனத்தில் எழுந்தருளல்.

10-ந் தேதி (சனி)

காளஹஸ்தி சிவபெருமான் பவனி.

ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் பவனி.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக் கோவிலில் வரதராச மூலவருக்கு திருமஞ்சன சேவை.

குச்சனூர் சனிஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.

11-ந் தேதி (ஞாயிறு)

ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் தங்க விருசப சேவை.

திருவைகாவூர் சிவன் புறப்பாடு.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளல் மற்றும் அலங்கார திருமஞ்சன சேவை.

திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

வேதாரண்யம் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.

12-ந் தேதி (திங்கள்)

காளஹஸ்தி சிவபெருமான் சேச வாகனத்தில் திருவீதி உலா.

ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை. இரவு தங்க பல்லக்கில் பவனி.

திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். 

ஆசிரியரின் தேர்வுகள்...