ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் ; 13-2-2018 முதல் 19-2-2018 வரை + "||" + These are the weekends; 13-2-2018 to 19-2-2018

இந்த வார விசேஷங்கள் ; 13-2-2018 முதல் 19-2-2018 வரை

இந்த வார விசேஷங்கள் ; 
13-2-2018 முதல் 19-2-2018 வரை
13-ந் தேதி (செவ்வாய்) மகா சிவராத்திரி. பிரதோஷம். திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் பத்திர தீபம் உற்சவம் ஆரம்பம். திருநெல்வேலி தொண்டர்கள் நயினார் கோவிலில் பஞ்சமுக அர்ச்சனை.
மூங்கிலனை காமாட்சியம்மன் கோவிலில் திருவிழா.

கோயம்புத்தூர் கோணியம்மன் கோவிலில் பூசாற்று விழா.

மேல்நோக்கு நாள்.

14-ந் தேதி (புதன்)

சாம்பல் புதன்.

சிரவண விரதம்.

திருகோகர்ணம், காளகஸ்தி, திருவைகாவூர், ஸ்ரீசைலம், ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.


ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் புறப்பாடு.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

மேல்நோக்கு நாள்.

15-ந் தேதி (வியாழன்)

அமாவாசை.

திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் பத்திர தீபம்.

ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி- அம்பாள் காலையில் இந்திர விமானத்திலும், இரவு தங்க விருட்ச வாகனத்திலும் புறப்பாடு.

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் தெப்ப உற் சவம்.

திருகோகர்ணம், காளகஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.

மேல்நோக்கு நாள்.

16-ந் தேதி (வெள்ளி)

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்களில் தெப்ப உற்சவம்.

திருவைகாவூர், வேதாரண்யம் ஆகிய தலங்களில் சிவபெருமான் புறப்பாடு.

கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கருட சேவை.

மேல்நோக்கு நாள்.

17-ந் தேதி (சனி)

சந்திர தரிசனம்.

திருகோகர்ணம், காளகஸ்தி, திருவைகாவூர், ஸ்ரீசைலம் ஆகிய தலங்களில் சிவபெருமான் கிரி வலம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தலங்களில் தெப்ப உற்சவம்.

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

மேல்நோக்கு நாள்.

18-ந் தேதி (ஞாயிறு)

திருநெல்வேலி மேலரத வீதி பரமேஸ்வரி அம்பாள் கோவில் வருசாபிஷேகம்.

காளகஸ்தி, ஸ்ரீசைலம், வேதாரண்யம் ஆகிய தலங்களில் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.

கீழ்நோக்கு நாள்.

19-ந் தேதி (திங்கள்)


முகூர்த்த நாள்.

சதுர்த்தி விரதம்.

ஸ்ரீசைலம், காளகஸ்தி ஆகிய தலங்களில் சிவபெருமான் திருவீதி உலா.

கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

மேல்நோக்கு நாள்.


தொடர்புடைய செய்திகள்

1. சுதக்‌ஷனை - புதிய தொடர்
ராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.
2. நவராத்திரியும்..நைவேத்தியமும்..
முப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.
3. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்
‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.
4. முப்பெருந்தேவிகளின் சிறப்புகள்
புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.
5. குரு பார்க்க கோடி நன்மை
நவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.