நட்சத்திர ரீதியாக ருத்ராட்சம்


நட்சத்திர ரீதியாக ருத்ராட்சம்
x

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய, அரும்பெரும் பொக்கிஷம் ருத்ராட்சம்.

ருத்ராட்சத்தில் ஒரு முகம் முதல் பலமுகம் கொண்ட ருத்ராட்சங்கள் வரை இருக்கின்றன. ருத்ராட்சத்தை வயது வரம்பில்லாமல் மொழி, இனம், தேசம், ஆண், பெண் என்கிற பேதமில்லாமல் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

குழந்தைகள் ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்து கொண்டால், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். மேலும் இல்லத்தில் லட்சுமி கடாட்சமும் நிறைந்திருக்கும். ருத்ராட்சம் அணிவதால் மனமும், உடலும் தூய்மை அடைகின்றது.

ருத்ராட்சத்தை அணியும்போது எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் ஏற்றது என்பதை அறிந்து அணிய வேண்டும். ஒவ்வொருவரும் 27 நட்சத்திரங்களில், ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் தான் பிறந்திருப்பார்கள். அந்த நட்சத்திரத்தின்படி ருத்ராட்சத்தை அணிந்துகொள்வது சிறப்பு தரும்.

இந்த 27 நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

அசுவினி - 9 முகம்

பரணி - 6 முகம் அல்லது 13 முகம்

கார்த்திகை - 12 முகம்

ரோகிணி - 2 முகம்

மிருகசீரிஷம் - 3 முகம்

திருவாதிரை - 8 முகம்

புனர்பூசம் - 5 முகம்

பூசம் - 7 முகம்

ஆயில்யம் - 4 முகம்

மகம் - 9 முகம்

பூரம் - 6 முகம் அல்லது 13 முகம்

உத்திரம் - 12 முகம்

ஹஸ்தம் - 2 முகம்

சித்திரை - 3 முகம்

சுவாதி - 8 முகம்

விசாகம் - 5 முகம்

அனுஷம் - 7 முகம்

கேட்டை - 4 முகம்

மூலம் - 9 முகம்

பூராடம் - 6 முகம் அல்லது 13 முகம்

உத்திராடம் - 12 முகம்

திருவோணம் - 2 முகம்

அவிட்டம் - 3 முகம்

சதயம் - 8 முகம்

பூரட்டாதி - 5 முகம்

உத்திரட்டாதி - 7 முகம்

ரேவதி - 4 முகம்

27 நட்சத்திரங்களில் அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குக் குறிப்பிட்டுள்ள ருத்ராட்ச முகங்களை அணிந்து கொண்டால், சிவபெருமானின் அருளால் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று வாழலாம். 

Next Story