ஆன்மிகம்

வராக மூர்த்தி அருளும் ஆலயங்கள் + "||" + Varaha Murthy Temples

வராக மூர்த்தி அருளும் ஆலயங்கள்

வராக மூர்த்தி அருளும் ஆலயங்கள்
சென்னை மகாபலிபுரம் அருகே உள்ள திருவிடந்தையில், மகாலட்சுமியை இடது மடியில் அமர்த்திய நிலையில் வராக மூர்த்தி அருள்பாலிக்கிறார். இவர் ‘நித்ய கல்யாணப் பெருமாள்’ என்றும் வழங்கப்படுகிறார்.
காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய கருவறை கோஷ்டத்தில் உள்ள கள்வர் பெருமாள், ஆதி வராகர் என்று வணங்கப்படுகிறார். இந்த சன்னிதி 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.

திருப்பதி திருமலையில் உள்ள புஷ்கரணி தீர்த்தத்தில் வராகமூர்த்தி பெருமாள் கோவில் கொண்டுள்ளார். இந்த வராகமூர்த்தியே, திருப்பதி வெங்கடாஜலபதிக்கு திருமலையில் தங்க இடம் தந்தவர் என்று கூறப்படுகிறது. எனவே வராகமூர்த்தியை வழிபட்ட பிறகே, வெங்கடேசப்பெருமாளை வழிபட வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

சென்னை அடுத்த செங்கல்பட்டு அருகே திருமலை வையாபூர் என்ற தலத்தில் லட்சுமி வராகமூர்த்தி அருள்பாலித்து வருகிறார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாப சுவாமி ஆலயத்திற்கு 1 கி.மீ. தொலைவில் லட்சுமியுடன் வராகமூர்த்தி கோவில் கொண்டு அருள்புரிகிறார்.

வடஇந்தியாவின் மதுரா நகரில், துவாரகீஷ் ஆலயத்திற்கு அருகில் ஆதிவராக மூர்த்திக்கு தனிக் கோவில் உள்ளது. செந்நிறத் தோற்றம் கொண்ட இவரை ‘லால் வராகர்’ என்கிறார்கள். இவருக்குச் சற்றுத் தொலைவில், வெண்ணிறத் தோற்றம் கொண்ட ஸ்வேத வராக மூர்த்தியும் இருக்கிறார்.