இந்த வார விசேஷங்கள் : 10-4-2018 முதல் 16-4-2018 வரை


இந்த வார விசேஷங்கள் : 10-4-2018 முதல் 16-4-2018 வரை
x
தினத்தந்தி 11 April 2018 5:22 AM GMT (Updated: 11 April 2018 5:22 AM GMT)

10-ந் தேதி (செவ்வாய்) * திருவெள்ளாறை சுவேதாத் திரிநாதர் ரத உற்சவம். * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள், தேசிகரோடு திருத்தேருக்கு எழுந்தருளல்.

* சமயபுரம் மாரியம்மன் பூத வாகனத்தில் வீதி உலா.

* கரிவலம்வந்த நல்லூர் சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.

* குரங்கணி முத்துமாலையம்மன் பவனி வருதல்.

* விளாம்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்.

* மேல்நோக்கு நாள்.

11-ந் தேதி (புதன்)

* அருப்புக்கோட்டை முத்து மாரியம்மன் பூக்குழி விழா.

* சமயபுரம் மாரியம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா.

* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சப்தாவரணம்.

* திருக்குற்றாலம் குற்றாலநாதர் வெள்ளி சப்பரத்தில் பவனி.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

* திருவெள்ளாறை சுவேதாத் திரிநாதர் தீர்த்தவாரி.

* மேல்நோக்கு நாள்.

12-ந் தேதி (வியாழன்)


* சர்வ ஏகாதசி.

* சமயபுரம் மாரியம்மன் விருட்ச சேவை.

* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று உற்சவம்.

* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.

* மேல்நோக்கு நாள்.

13-ந் தேதி (வெள்ளி)


* பிரதோஷம்.

* கோவில்பட்டி பூவண்ணநாதர், கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ணநாதர் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.

* சமயபுரம் மாரியம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா.

* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று உற்சவம், இரவு தாயார் அலங்கார படிச்சட்டத்தில் பவனி.

* வள்ளிமலை, திருப்போரூர் ஆகிய தலங்களில் முருகப்பெருமான் படித் திருவிழா.

* கீழ்நோக்கு நாள்.

14-ந் தேதி (சனி)


* தமிழ் வருடப்பிறப்பு.

* மாத சிவராத்திரி.

* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சண்முகர் அன்னாபிஷேகம்.

* திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயருக்கு 5008 கனி அலங்காரம்.

* திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலில் பாலாபிஷேகம்.

* மதுரை மீனாட்சியம்மன் வைர கிரீடத்தில் காட்சி தருதல்.

* மேல்நோக்கு நாள்.

15-ந் தேதி (ஞாயிறு)


* அமாவாசை.

* திருச்சி தாயுமானவர் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.

* சங்கரநயினார் கோவிலில் சுவாமி தங்கப்பல்லக்கில் பவனி.

* திருத்தணி முருகப்பெருமான் சூரிய பிரபையில் பவனி.

* சமநோக்கு நாள்.

16-ந் தேதி (திங்கள்)


* அமாவாசை சோமவாரம்.

* திருக்கடவூர் சிவபெருமான் திருக்கல்யாணம்.

* திருச்சி தாயுமானவர் பூத வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் உலா.

* சமயபுரம் மாரியம்மன் வெள்ளி குதிரையில் புறப்பாடு.

* சீர்காழி சிவபெருமான் புஷ்ப விமானத்தில் பவனி.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

* சமநோக்கு நாள்.

Next Story