ஆன்மிகம்

நன்மை தரும் நரசிம்மர் வழிபாடு + "||" + Narasimha worship that is beneficial

நன்மை தரும் நரசிம்மர் வழிபாடு

நன்மை தரும் நரசிம்மர் வழிபாடு
தேவர்களையும், முனிவர்களையும் துன்பப்படுத்தி வந்த இரண்யனை, நரசிம்ம அவதாரம் எடுத்து திருமால் அழித்தார்.
இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப் பிறகு, ஸ்ரீமன் நாராயணனிடம் வந்து தங்களுக்கு நரசிம்ம திருக்கோலத்தை காட்டியருளும்படி வேண்டினர்.

அதற்கிசைந்த பெருமாள், நரசிம்ம அவதாரத்தை அவர்களுக்குக் காட்டி அருளினார். அவ்வாறு நரசிம்ம அவதாரத்தை முனிவர்களுக்கு காட்டி அருளிய தலம் தமிழகத்தில் எட்டு இருக்கிறது. அவை சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்களாகும்.


நமது ஆன்மிகப் பாதையில் உள்ள தடைகளை நீக்கி ஞானத்தை வழங்க வல்லவர், பகவான் நரசிம்மர். அது மட்டுமின்றி, அனைத்து விதமான தீய சக்திகளிடமிருந்தும் பாதுகாப்பு அளிக்க வல்லவரும் இவரே. மேலும் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தாக்கத்தை மாற்ற, நரசிம்மர் வழிபாடு நன்மை அளிப்பதாக அமையும்.


தொடர்புடைய செய்திகள்

1. கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்?
திருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.
2. புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...
ஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.
3. தீபத்தில் முப்பெரும்தேவியர்
முப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.
4. மகாபாரதம் சொல்லும் தத்துவம்
மகாபாரதம்.. படிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படும், எவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சிறப்புமிக்க காவியம்.
5. சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ
சிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.