ஆன்மிகம்

எங்கும் நிறைந்த நரசிம்மர் + "||" + Narasimhar is everywhere

எங்கும் நிறைந்த நரசிம்மர்

எங்கும் நிறைந்த நரசிம்மர்
தன்னை நம்பும் பக்தனைக் காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதை பறைசாற்றும் அவதாரம் நரசிம்மர் அவதாரம் ஆகும்.
இறைவன் எங்கும் நிறைந்துள்ளார் என்பதையும், தூய பக்தி கொண்டவர்கள் அசுரர்கள் என்றாலும், அவர்களைக் காப்பது இறைவனின் கடமை, அப்படி தன்னை நம்பும் பக்தனைக் காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதையும் பறைசாற்றும் அவதாரம், நரசிம்மர் அவதாரம் ஆகும்.
யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், கோப நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என்று நரசிம்மரின் முக்கியமான ஒன்பது வடிவங்கள் இருக்கின்றன. இவைத் தவிர பஞ்சமுக  நரசிம்மர், விஷ்ணு நரசிம்மர், ருத்ர நரசிம்மர் போன்ற பல வடிவங் களிலும் விஷ்ணுவின் ஆலயங்களில் நரசிம்மர் அருள்பாலிப்பதைப் பார்க்கலாம்.

நரசிம்மர் வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையாகும். அதிலும் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் நரசிம்ம ஜெயந்தி (28-4-2018) அன்று இந்த நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். நரசிம்மருக்கு செவ்வரளி போன்ற சிவப்பு வண்ண மலர்கள், சர்க்கரைபொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுத்து வழிபடலாம். மேலும் நரசிம்மர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், விஷ்ணுவுக்கு ஏற்ற மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றையும் நரசிம்மருக்கு படைத்து வழிபாடு செய்யலாம்.