இந்த வார விசேஷங்கள் - 1-5-2018 முதல் 7-5-2018 வரை
மதுரை கள்ளழகர் காலை மோகன அவதாரம், இரவு மைசூர் மண்டபத்தில் புஷ்பப் பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலக் காட்சி.
1-ந் தேதி (செவ்வாய்)
உழைப்பாளர் தினம்.
மதுரை கள்ளழகர் காலை மோகன அவதாரம், இரவு மைசூர் மண்டபத்தில் புஷ்பப் பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலக் காட்சி.
திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.
சென்னை சென்னகேசவப் பெருமாள் இரவு சந்திர பிரபையில் பவனி.
சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் விைடயாற்று உற்சவம்.
கீழ்நோக்கு நாள்.
2-ந் தேதி (புதன்)
முகூர்த்த நாள்.
மதுரை கள்ளழகர் அதிகாலை திருமலைக்கு எழுந்தருளல்.
திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் காலை சூரிய பிரபையிலும், மாலை சந்திர பிரபையிலும் பவனி.
சென்னை சென்னகேசவப் பெருமாள் இரவு சேஷ வாகனத்தில் வீதி உலா.
வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு.
சமநோக்கு நாள்.
3-ந் தேதி (வியாழன்)
சங்கடஹர சதுர்த்தி.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் காலை ேமாகன அவதாரம், மாலை அனுமன் வாகனத்தில் வீதி உலா.
சென்னை சென்னகேசவப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம், தங்கப்பல்லக்கில் பவனி வருதல்.
இன்று விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பு தரும்.
திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
சமநோக்கு நாள்.
4-ந் தேதி (வெள்ளி)
அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.
முகூர்த்த நாள்.
சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கண்ணாடி பல்லக்கில் பவனி.
திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் சூர்ணாபிஷேகம், இரவு புண்ணியகோடி விமானத்திலும், யானை வாகனத்திலும் புறப்பாடு.
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரி சனம்.
கீழ்நோக்கு நாள்.
5-ந் தேதி (சனி)
ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ரத உற்சவம்.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆலயத்தில் உற்சவம் தொடக்கம்.
சென்னை சென்னகேசவப் பெருமாள் ஆலயத்தில் ரத உற்சவம்.
சமயபுரம் மாரியம்மன் வசந்த மண்டபம் எழுந்தருளும் உற்சவம்.
வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி.
திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
கீழ்நோக்கு நாள்.
6-ந் தேதி (ஞாயிறு)
முகூர்த்த நாள்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் பல்லக்கில் வெண்ணெய் தாழி சேவை, மாலை குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு.
ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு கண்டருளல்.
கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் உள்ள அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
மேல்நோக்கு நாள்.
7-ந் தேதி (திங்கள்)
முகூர்த்த நாள்.
சிரவண விரதம்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
சென்னை சென்னகேசவப் பெருமாள் தங்கப் பல்லக்கிலும், புண்ணிய கோடி விமானத்திலும் பவனி.
ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
கீழ்திருப்பதி கல்வேங்கடேசப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் திருவீதி உலா.
வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி.
மேல்நோக்கு நாள்.
Related Tags :
Next Story