ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் 5-6-2018 முதல் 11-6-2018 வரை + "||" + Occasions this week From 5-6-2018 to 11-6-2018

இந்த வார விசேஷங்கள் 5-6-2018 முதல் 11-6-2018 வரை

இந்த வார விசேஷங்கள் 5-6-2018 முதல் 11-6-2018 வரை
5-ந் தேதி (செவ்வாய்) * சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம்.

* மேல்நோக்கு நாள்.

6-ந் தேதி (புதன்)

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராத்திரி மூவர் உற்சவம் ஆரம்பம்.


* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

* திருப்பதி ஏழுமலையப்பன் சகசரகலசாபிஷேகம்.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மஞ்சள் நீராட்டு, ஊஞ்சல் உற்சவ ேசவை.

* மேல்நோக்கு நாள்.

7-ந் தேதி (வியாழன்)


* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

* கீழ்நோக்கு நாள்.

8-ந் தேதி (வெள்ளி)

* ராமேஸ்வரர் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயார் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.

* மேல்நோக்கு நாள்.

9-ந் தேதி (சனி)

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு கண்டருளல்.

* திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.

* இன்று கருட தரிசனம் நன்று.

* சமநோக்கு நாள்.

10-ந் தேதி (ஞாயிறு)

* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு கண்டருளல்.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் உள்ள அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

* இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.

* சமநோக்கு நாள்.

11-ந் தேதி (திங்கள்)

* சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனி உத்திர உற்சவம் ஆரம்பம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூல வருக்கு திருமஞ்சன சேவை.

* திருப்போரூர் முருகப்பெருமான் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

* மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் இன்று மாலை பிரதோஷ வழிபாடு. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.

* கீழ்நோக்கு நாள்.