ஆன்மிகம்

கைரேகை அற்புதங்கள் : ஒழுக்கத்தை சொல்லும் ரேகைகள் + "||" + Fingerprints Miracles: Moral Sayings

கைரேகை அற்புதங்கள் : ஒழுக்கத்தை சொல்லும் ரேகைகள்

கைரேகை அற்புதங்கள் : ஒழுக்கத்தை சொல்லும் ரேகைகள்
ஆணாக இருந்தாலும் சரி.. பெண்ணாக இருந்தாலும் சரி.. மனிதனுக்கு நடத்தை மிக முக்கியம்.
ஒருவரது நடத்தை பிசகினால் அது எவ்வளவு பெரிய விபரீதத்தை வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம். எனவே மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் நடத்தை பிசகாமல் வாழ வேண்டும்.

கால புருஷனின் 7-ம் இடமான துலாம் ராசி திருமணத்தையும், 8-ம் இடமான விருச்சிக ராசி மர்ம ஸ்தானத்தையும் குறிக்கிறது. காம உணர்வையும், உடலுறவையும் சயன சுக ஸ்தானமான 12-ம் வீடான மீன ராசி குறிப்பதால், மேற்கண்ட மூன்று பாவங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

சுக்ரன் ஆட்சி, உச்சம், சுப ஸ்தானம் பெற்று, பாப கிரகங்களின் சம்பந்தம் இன்றி வலுப்பெற்று இருந்தால், அந்த ஜாதகரின் பாலுணர்வு மிதமாக இருக்கும். அவர் நல்ல நடத்தைக் கொண்டவர் என்று சொல்லலாம். செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய நால்வரும் பாப கிரகங்கள். இவர்கள் சுக்ரனின் வீட்டில் இருந்தாலோ அல்லது இவர்களில் யாராவது சுக்ரனை பார்வை செய்தாலோ அந்த நபருக்கு பாலுணர்வு அதிகம் இருக்கும். இவர் நடத்தை பிசகு உள்ளவராகவும் திகழ வாய்ப்புள்ளது.

பெண்களின் ஜாதகத்தில் வாழ்க்கைத் துணை, பாலுணர்வு போன்வற்றுக்கு காரணமானவர், செவ்வாய் ஆவார். செவ்வாயும், சந்திரனும், பெண்களின் மாதவிடாய்க்கு பொறுப்பு ஏற்கிறார்கள். ஆண்கள் ஜாதகத்தில் சுக்ரன் கெடாமல் வலுக்க வேண்டும். அதேபோல் பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் கெடக்கூடாது. செவ்வாய், சந்திரன், ஏழாம் இடம் ஆகிய மூன்றும் சனி அல்லது ராகுவின் சேர்க்கை பெற்றாலோ, அல்லது அந்த கிரகங் களின் பார்வை பெற்றாலோ, அந்த பெண் நடத்தை பிசகிச் செல்ல வாய்ப்புண்டு. ஒருவரது லக்னாதிபதி சுக்ரனின் சேர்க்கையோ அல்லது பார்வையோ பெற்றிருந்தால் அந்த ஜாதகர் பிற பெண்களின் மீது நாட்டம் கொண்டவராக இருப்பார்.

இனி கைரேகைப்படி நடத்தை பிசகு யாருக்கு உண்டாகும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். பெண்ணின் இடது கையில் அமைந்துள்ள சுக்ர மேடு தட்டையாக அமுங்கி, மேடே தென்படாமல் அமைந்திருந்தால், அவர் வழி தவறிச் செல்லக் கூடும். இந்த அமைப்புள்ள பெண்ணிடம் நல்ல ஒழுக்கத்தை காண முடியாது. பெண்களுக்கு புருவத்தில் அதிக அளவு ரோமம் அமைந்திருக்கக்கூடாது. இது நடத்தை பிசகைத் தூண்டும். பெண்ணின் கால் விரலில் உள்ள சின்ன விரல் தரையை தொட்டு இருக்க வேண்டும். தொடாமல் மேல்நோக்கி எழுந்து நின்றால், அந்தப் பெண் வழி தவற இடமுண்டு.

ஆயுள் ரேகைக்கு சமமாக செவ்வாய் ரேகை அமைந்த ஆணுக்கு ஒழுக்கம் இருக்க வாய்ப்பில்லை. பெண்களுக்கு கன்னத்தில் குழி இருப்பது நல்லதல்ல. ஆணின் ராகு மேட்டில் ராகு பலமின்றி அமைந்திருந்தால், அந்த நபர் ஒழுக்கம் இன்றி வாழ்வார். குரு மேட்டில் சாலமன் ரேகை அமைந்த ஆண் பாப காரியங்களை ரகசியமாக செய்வார்.

- கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.