இந்த வார விசேஷங்கள்
12-6-2018 முதல் 18-6-2018 வரை
12-ந் தேதி (செவ்வாய்)
கார்த்திகை விரதம்.
மாத சிவராத்திரி.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.
சிதம்பரம் ஆவுடையார் கோவில்களில் சிவபெருமான் உற்சவம் தொடக்கம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.
சமநோக்கு நாள்.
13-ந் தேதி (புதன்)
அமாவாசை.
திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
ஆவுடையார்கோவில் சிவபெருமான் பவனி வருதல்.
மேல்நோக்கு நாள்.
14-ந் தேதி (வியாழன்)
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
சிதம்பரம் ஆலயத்தில் சுவாமி வீதி உலா.
திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
சமநோக்கு நாள்.
15-ந் தேதி (வெள்ளி)
கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.
திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனத்தில் பவனி.
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
மேல்நோக்கு நாள்.
16-ந் தேதி (சனி)
ரம்ஜான் பண்டிகை.
பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
குச்சானூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
இன்று கருட சேவை நன்மை தரும்.
சமநோக்கு நாள்.
17-ந் தேதி (ஞாயிறு)
முகூர்த்த நாள்.
சதுர்த்தி விரதம்.
கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.
மேல்நோக்கு நாள்.
18-ந் தேதி (திங்கள்)
சிதம்பரம் நடராஜ மூர்த்தி தங்க ரதத்தில் பிச்சாடனராக காட்சி தருதல்.
சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
கானாடுகாத்தான், திருக்கோளக்குடி ஆகிய தலங்களில் சிவபெருமான் உற்சவம் தொடக்கம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
கீழ்நோக்கு நாள்.
Related Tags :
Next Story