இந்த வார விசேஷங்கள் 19-6-2018 முதல் 25-6-2018 வரை


இந்த வார விசேஷங்கள் 19-6-2018 முதல் 25-6-2018 வரை
x
தினத்தந்தி 20 Jun 2018 6:49 AM GMT (Updated: 20 Jun 2018 6:49 AM GMT)

19-ந் தேதி (செவ்வாய்) * சஷ்டி விரதம். * திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் உற்சவம் ஆரம்பம், சுவாமி தங்கப் பூங்கோவிலிலும், அம்பாள் சப்பரத்திலும் பவனி.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயங்களில் ஊஞ்சல் சேவை உற்சவம் தொடக்கம்.

சிதம்பரம் நடராஜ பெருமான் திருவீதி உலா.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

கீழ்நோக்கு நாள்.

20-ந் தேதி (புதன்)

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் நடேசர் அன்னாபிஷேகம், ஆனி உத்திர அபிஷேகம், நடராஜர் அபிஷேகம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் பவனி.

சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.

சிதம்பரம் நடராஜர் கோவில், ஆவுடையார் கோவில் ஆகிய தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.

கானாடுகாத்தான் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.

கீழ்நோக்கு நாள்.

21-ந் தேதி (வியாழன்)


திருநெல்வேலி நெல்லையப்பர் தங்க பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா.

ராஜபாளையம் சமீபம் பெத்தவ நல்லூர் மயூரநாதர் பவனி.

மதுரை மீனாட்சி ஆலயம், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயங்களில் ஊஞ்சல் சேவை.

சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் திருவீதி உலா.

சமநோக்கு நாள்.

22-ந் தேதி (வெள்ளி)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காலை சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் வீதி உலா, இரவு வெள்ளி விருட்ச சேவை.

மதுராந்தகம் கோதண்டராம சுவாமி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

கானாடுகாத்தான், திருக்கோளக்குடி ஆகிய தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயங்களில் ஊஞ்சல் சேவை.

சமநோக்கு நாள்.

23-ந் தேதி (சனி)

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் வருசாபிஷேகம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம சுவாமி ஆனி உற்சவம் ஆரம்பம்.

திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் காலை சுவாமி-அம்பாள் வெள்ளி விருட்ச சேவை, இரவு இந்திர விமானத்தில் வீதி உலா.

சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.

சமநோக்கு நாள்.

24-ந் தேதி (ஞாயிறு)

சர்வ ஏகாதசி.

திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் அனுமன் வாகனத்திலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி.

திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா.

சமநோக்கு நாள்.

25-ந் தேதி (திங்கள்)

பிரதோஷம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி பல்லக்கிலும், அம்பாள் தவழ்ந்த திருக்கோலமாய் முத்துப் பல்லக்கிலும் பவனி.

திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் அனுமன் வாகனத்திலும், தாயார் சந்திர பிரபையிலும் புறப்பாடு.

மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.

கீழ்நோக்கு நாள். 

Next Story