ஆடி மாத விழாக்கள்


ஆடி மாத விழாக்கள்
x
தினத்தந்தி 10 July 2018 6:48 AM GMT (Updated: 10 July 2018 6:48 AM GMT)

ஆடி மாதத்தில் தேடிவரும் திருவிழாக்களை நாம் கொண்டாட வேண்டும். அதன் மூலம் கோடிப் புண்ணியமும் கிடைக்கும். கோலாகலமான வாழ்க்கை அமையும்.

ஆடி மாதம் 11-ந் தேதி வெள்ளிக்கிழமை (27.7.2018) ஆடிப் பவுர்ணமி. அன்றைய தினம் மலைவலம் வந்தால் மகத்துவம் கிடைக்கும்.

ஆடி மாதம் 18-ந் தேதி வெள்ளிக்கிழமை (3.8.2018) ஆடிப்பெருக்கு. அன்றைய தினம் புது முயற்சிகள் செய்ய பொன்னான நாள்.

ஆடி மாதம் 20-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை (5.8.2018) ஆடிக் கார்த்திகை தினம். அன்றைய தினம் கந்தப்பெருமானை வழிபட்டால் கவலைகளை தீரும்.

ஆடி மாதம் 26-ந் தேதி சனிக்கிழமை (11.8.2018) ஆடி அமாவாசை. அன்றைய தினம் முன்னோர்களை வழிபட்டால் முன்னேற்றம் ஏற்படும்.

ஆடி மாதம் 28-ந் தேதி திங்கட்கிழமை (13.8.2018) ஆடிப்பூரம். அன்றைய தினம் அம்பிகை வழிபாடு இன்பங்களை வழங்கும்.

ஆடி மாதம் 29-ந் தேதி செவ்வாய்க்கிழமை. (14.8.2018) நாகசதுர்த்தி நாக தெய்வ வழிபட்டால் நன்மைகள் ஏற்படும்.

ஆடி மாதம் 30-ந் தேதி புதன்கிழமை (15.8.2018) கருட பஞ்சமி. அன்றைய தினம் கருடன், லட்சுமி, விஷ்ணு ஆகியோரை வழிபட்டால் கனிந்த வாழ்க்கை அமையும். 

Next Story