வாழ்வை வளமாக்கும் விருட்ச வழிபாடு


வாழ்வை வளமாக்கும் விருட்ச வழிபாடு
x
தினத்தந்தி 12 July 2018 9:30 PM GMT (Updated: 11 July 2018 7:06 AM GMT)

இயற்கையையே இறைவனாக நினைத்து வழிபட்டவர்கள் நம் முன்னோர்கள்.

இயற்கை வழிபாட்டில் முக்கியமான ஒன்றுதான் ‘விருட்ச வழிபாடு’ என்னும் மர வழிபாடு. இதற்கு ஆதாரம் தரும் விதமாக ஆலயம் தோறும் ஒவ்வொரு தல விருட்சம் இருப்பதை இப்போதும் காண முடியும். அது மட்டுமின்றி 27 நட்சத்திரங்களுக்கும் விருட்சங்கள் இருக்கின்றன. அந்தந்த நட்சத்திரத்திற்கு உரிய மரத்தை வழிபாடு செய்து வந்தால், நினைத்த பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரும் மரம் என்றுதான் சில கோவில்களில் வைத்திருப்பார்கள். அதைத் தான் பக்தர்கள் பலரும் வழிபட்டு வருவார்கள். ஆனால் ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் உண்டு. அவற்றில் ஒவ்வொரு பாதத்திற்கும் உரிய விருட்சம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. ஒரு நட்சத்திரத்திற்கான பொதுவான மரத்தை வழிபடுவதை விட, அந்த நட்சத்திரத்தில் தாங்கள் பிறந்த பாதத்திற்கான விருட்சத்தை தேர்வு செய்து வழிபட்டால் கூடுதல் பலனைத் தரும்.

இங்கு ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உள்ள நான்கு பாதத்திற்கான விருட்சங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

அஸ்வினி

1-ம் பாதம் - காஞ்சிதை

(எட்டி)

2-ம் பாதம் - மகிழம்

3-ம் பாதம் - பாதாம்

4-ம் பாதம் - நண்டாஞ்சு

பரணி

1-ம் பாதம் - அத்தி

2-ம் பாதம் - மஞ்சக்கடம்பு

3-ம் பாதம் - விளா

4-ம் பாதம் - நந்தியா

வட்டை

கார்த்திகை

1-ம் பாதம் - நெல்லி

2-ம் பாதம் - மணிபுங்கம்

3-ம் பாதம் - வெண் தேக்கு

4-ம் பாதம் - நிரிவேங்கை

ரோகிணி

1-ம் பாதம் - நாவல்

2-ம் பாதம் - சிவப்பு

மந்தாரை

3-ம் பாதம் - மந்தாரை

4-ம் பாதம் - நாகலிங்கம்

மிருகசீரிஷம்

1-ம் பாதம் - கருங்காலி

2-ம் பாதம் - ஆச்சா

3-ம் பாதம் - வேம்பு

4-ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை

1-ம் பாதம் - செங்கருங்காலி

2-ம் பாதம் - வெள்ளை

3-ம் பாதம் - வெள்ளெருக்கு

4-ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்

1-ம் பாதம் - மூங்கில்

2-ம் பாதம் - மலைவேம்பு

3-ம் பாதம் - அடப்பமரம்

4-ம் பாதம் - நெல்லி

பூசம்

1-ம் பாதம் - அரசு

2-ம் பாதம் - ஆச்சா

3-ம் பாதம் - இருள்

4-ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்

1-ம் பாதம் - புன்னை

2-ம் பாதம் - முசுக்கட்டை

3-ம் பாதம் - இலந்தை

4-ம் பாதம் - பலா

மகம்

1-ம் பாதம் - ஆலமரம்

2-ம் பாதம் - முத்திலா மரம்

3-ம் பாதம் - இலுப்பை

4-ம் பாதம் - பவளமல்லி

பூரம்

1-ம் பாதம் - பலா

2-ம் பாதம் - வாகை

3-ம் பாதம் - ருத்திராட்சம்

4-ம் பாதம் - பலா

உத்திரம்

1-ம் பாதம் - ஆலசி

2-ம் பாதம் - வாதநாராயணன்

3-ம் பாதம் - எட்டி

4-ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்

1-ம் பாதம் - ஆத்தி

2-ம் பாதம் - தென்னை

3-ம் பாதம் - ஓதியன்

4-ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை

1-ம் பாதம் - வில்வம்

2-ம் பாதம் - புரசு

3-ம் பாதம் - கொடுக்காபுளி

4-ம் பாதம் - தங்க அரளி

சுவாதி

1-ம் பாதம் - மருது

2-ம் பாதம் - புளி

3-ம் பாதம் - மஞ்சள் கொன்றை

4-ம் பாதம் - கொழுக்கட்டை

மந்தாரை

விசாகம்

1-ம் பாதம் - விளா

2-ம் பாதம் - சிம்சுபா

3-ம் பாதம் - பூவன்

4-ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்

1-ம் பாதம் - மகிழம்

2-ம் பாதம் - பூமருது

3-ம் பாதம் - கொங்கு

4-ம் பாதம் - தேக்கு

கேட்டை

1-ம் பாதம் - பலா

2-ம் பாதம் - பூவரசு

3-ம் பாதம் - அரசு

4-ம் பாதம் - வேம்பு

மூலம்

1-ம் பாதம் - மராமரம்

2-ம் பாதம் - பெரு

3-ம் பாதம் - செண்பக மரம்

4-ம் பாதம் - ஆச்சா

பூராடம்

1-ம் பாதம் - வஞ்சி

2-ம் பாதம் - கடற்கொஞ்சி

3-ம் பாதம் - சந்தானம்

4-ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்

1-ம் பாதம் - பலா

2-ம் பாதம் - கடுக்காய்

3-ம் பாதம் - சாரப்பருப்பு

4-ம் பாதம் - தாளை

திருவோணம்

1-ம் பாதம் - வெள்ளெருக்கு

2-ம் பாதம் - கருங்காலி

3-ம் பாதம் - சிறுநாகப்பூ

4-ம் பாதம் - பாக்கு

அவிட்டம்

1-ம் பாதம் - வன்னி

2-ம் பாதம் - கருவேல்

3-ம் பாதம் - சீத்தா

4-ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்

1-ம் பாதம் - கடம்பு

2-ம் பாதம் - பரம்பை

3-ம் பாதம் - ராம்சீதா

4-ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி

1-ம் பாதம் - தேமா

2-ம் பாதம் - குங்கிலியம்

3-ம் பாதம் - சுந்தரவேம்பு

4-ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி

1-ம் பாதம் - வேம்பு

2-ம் பாதம் - குல்மோகர்

3-ம் பாதம் - சேராங்

கொட்டை

4-ம் பாதம் - செம்மரம்

ரேவதி

1-ம் பாதம் - பனை

2-ம் பாதம் - தங்க அரளி

3-ம் பாதம் - செஞ்சந்தனம்

4-ம் பாதம் - மஞ்சபலா

இவற்றில் உங்கள் நட்சத்திரத்தின் பாதங்களுக்குரிய மரத்தை அறிந்து வழிபடுவது உங்கள் வாழ்வை சிறப்பாக்கும். மேலும் அந்த மரத்தின் செடியை ஏதாவது ஒரு ஆலயத்தில் நீங்களே உங்கள் கையால் நட்டு வைப்பதும் நன்மை பயக்கும். அந்த மரம் வளர, வளர உங்கள் வாழ்வும் வளர்ச்சி பெறும். உங்கள் நட்சத்திரங்களுக்குரிய மரமானது, உங்களின் பாவக் கதிர்களை கிரகித்து, உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை ஏற்படுத்தித் தரும்.

-கடகம் ராமசாமி

Next Story