அகத்தியர் சிறை பிடித்த காவிரி


அகத்தியர் சிறை பிடித்த காவிரி
x
தினத்தந்தி 18 July 2018 10:39 AM GMT (Updated: 18 July 2018 10:39 AM GMT)

காவிரி நதியின் பிறப்பிடமாக கருதப்படும் தலைக்காவிரி பாகமண்டலாவில் உள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் இருந்து உருவாகிறது.

கொடவா மற்றும் இந்து மக்களின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக இந்த பகுதி திகழ்கிறது. இங்கு காவிரியும், கன்னிகா நதியும், கண்ணுக்கு தெரியாத ஜோதி நதியும் சங்கமிப்பதால் இது ‘திரிவேணி சங்கமம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

அகத்தியரால் கமண்டலத்தில் சிறை பிடிக்கப்பட்ட காவிரி நதி காக்கை உருவில் வந்த விநாயகரால் விடுவிக்கப்பட்டு இங்குள்ள பகுதிகளில் ஓடியதாக புராண வரலாறுகள் கூறுகிறது. மேலும் இந்த பகுதியில் காவிரி தாய், அகஸ்தியர் மற்றும் விநாயகர் ஆகியோருக்கும் கோவில்கள் உள்ளன.

அத்துடன் இங்கு உள்ள சிவன்கோவிலில் பழமையான சிவலிங்கம் இருக்கிறது. மேலும் இந்த இடம் அகஸ்தியருக்கு, சிவபெருமான் காட்சி அளித்த இடமாகவும் கருதப்படுகிறது.

எனவே இங்குள்ள கோவில் அகஸ்தீஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது. மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி கடவுளை வழிபடுவது சிறப்பாகும்.

குடகு மாவட்டம் மடிகேரியில் இருந்து 38 கிலோ மீட்டர் தூரத்தில் தலைக்காவிரி அமைந்து உள்ளது. இதேபோல் இங்கு 11-ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட பாகண்டேஸ்வரா கோவிலும் உள்ளது. 

Next Story