ஆன்மிகம்

சேலம் செவ்வாய்பேட்டையில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் + "||" + Salem in the Mars Base Mariamman Temple Storm

சேலம் செவ்வாய்பேட்டையில் மாரியம்மன் கோவில் தேரோட்டம்

சேலம் செவ்வாய்பேட்டையில் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சேலம்,

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 13-ந் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கி நடை பெற்று வருகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், கொடியேற்றம் மற்றும் அலகு குத்துதல், சக்தி அழைப்பு, உருளுதண்டம், பொங்கல் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தநிலையில், நேற்று முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடந்தது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.


இதைத்தொடர்ந்து சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன், கோவில் நிர்வாக அதிகாரி புனிதராஜ், கோவில் நிர்வாகிகள், அ.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். செவ்வாய்பேட்டை தேர்நிலையம் பகுதியில் இருந்து தேரோட்டம் தொடங்கியது. பின்னர் அப்புசெட்டி தெரு, கபிலர் தெரு, மீனாட்சி அம்மன் கோவில் தெரு, பெரிய எழுத்துக்காரர் தெரு, சந்தைப்பேட்டை மெயின்ரோடு, முக்கோணம் தெரு, செவ்வாய்பேட்டை மெயின்ரோடு வழியாக தேர் பக்தர்களால் இழுத்து வரப்பட்டு மீண்டும் தேர்நிலையை அடைந்தது.

தேரோட்டத்தையொட்டியும், ஆடி கடைசி வெள்ளிக் கிழமை என்பதாலும் மூலவர் அம்மனுக்கு முத்துக்கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் செவ்வாய்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆடித்திருவிழாவை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக் கிழமை) இரவு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் விரதம் இருக்கும் பக்தர்கள் பல்வேறு சாமி வேடங்களை அணிந்து வண்டியில் ஊர்வலமாக வலம் வருவார்கள். இதைத்தொடர்ந்து சிறப்பாக அலங்காரம் செய்திருந்த வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சத்தாபரணம், 14-ந் தேதி வசந்த உற்சவம், 17-ந் தேதி விடையாற்றி ஊஞ்சல், 18-ந் தேதி சிறப்பு அலங்காரம், 19-ந் தேதி மகா அபிஷேகம், 25-ந் தேதி நெய் அபிஷேகம் மற்றும் 26-ந் தேதி 108 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மணிமண்டபம் திறப்புவிழா: ‘எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்து மக்களுக்கு அரசு சேவை செய்யும்’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
‘எத்தனை தடைகள் வந்தாலும் அதை தகர்த்து மக்களுக்கு இந்த அரசு சேவை செய்யும்’ என்று சேலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
2. சேலத்தில் பரபரப்பு: தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை - தண்டவாளத்தில் உடல் வீச்சு
சேலத்தில் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். தண்டவாளத்தில் வீசப்பட்ட அவருடைய உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. சேலம் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. சேலம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவுநாள் அனுசரிப்பு
சேலம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
5. வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.