ஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு!


ஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு!
x
தினத்தந்தி 16 Aug 2018 2:48 PM IST (Updated: 16 Aug 2018 2:48 PM IST)
t-max-icont-min-icon

அனுமன் வாலில் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் சந்தனமும், அதன்மேல் குங்குமமும் வைத்து ஒரு மண்டலம் வழிபாடு செய்து வர வேண்டும்.

பறந்து செல்லும் அனுமன் படத்தை வாங்கி, அதன் வால்பகுதியில் ஒரு மண்டல காலம் பொட்டு வைத்து அனுமன் கவசம் பாடி வழிபட்டால் திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும்.

தடைகள் அகலும். குடும்பப் பிரச்சினைகள் அகலும். அனுமனுக்கு வாலில் பலம். முருகனுக்கு வேலில் பலம். யோகபலம் பெற்ற நாளில் பொட்டு வைக்கத் தொடங்க வேண்டும். வாலில் பொட்டு வைத்தால், நம் வாழ்க்கைப் பிரச்சினை தீரும் என்பதை அனுபவத்தில் கண்டு கொள்வீர்கள்.

வாலின் சக்தியை இலங்கையில் காண்பித்தவர் அனுமன். அவரது வாலில் கீழிருந்து மேலாக பொட்டு வைத்தால் தான் வெற்றிகிட்டும்.

ஒருமுறை ராமபிரானுக்கே, அனுமன் தனது வாலை சுற்றி வைத்து கோட்டை போல எழுப்பி, பாதுபாப்பு அளித்ததாக புராணங்கள் சொல்கின்றன. அனுமனின் பலம் அனைத்தும் வாலில் இருப்பதாக ஐதீகம். எனவே அந்த வாலைத் தொட்டு வழிபட்டால் நாளும் நன்மை கிடைக்கும்.


Next Story