ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் + "||" + This weekend Occasions

இந்த வார விசேஷங்கள்

இந்த வார விசேஷங்கள்
.
4-9-2018 முதல் 10-9-2018 வரை 

4-ந் தேதி (செவ்வாய்)

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் உற்சவம் ஆரம்பம்.

ேதரெழுந்தூர், தேவகோட்டை, திண்டுக்கல், மிலட்டூர், உப்பூர் ஆகிய தலங்களில் விநாயகப் பெருமானுக்கு உற்சவம் ஆரம்பம்.

மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் சேஷ வாகனத்தில் சுவாமி திருவீதி உலா.

திருச்செந்தூர் சுப்பிரமணியர் காலை கோ ரதத்திலும், இரவு வெள்ளி தேரிலும் பவனி.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.

சமநோக்கு நாள்.

5-ந் தேதி (புதன்)

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி பவனி.

திருவலஞ்சுழி சுவேத விநாயகர் உற்சவம் ஆரம்பம்.

மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி மாலை ஊஞ்சலில் வீணை மோகினி அலங்காரம், இரவு ராம அவதார காட்சி.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் இரவு சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

மேல்நோக்கு நாள்.

6-ந் தேதி (வியாழன்)

முகூர்த்த நாள்.

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுகநயினார் காலை சிவப்பு சாத்தியும், பகலில் பச்சை சாத்தியும் பவனி.

செருத்துணை நாயனார் குருபூஜ.

மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி கன்றால் விளா எறிந்த லீலை, சேஷ வாகனத்தில் நாராயண திருக்கோலமாக காட்சியருளல்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

சமநோக்கு நாள்.

7-ந் தேதி (வெள்ளி)

பிரதோஷம்.

அதிபத்த நாயனார், புகழ்துணை நாயனார் குரு பூஜை.

மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ரங்கநாதர் திருக்கோலமாய் காட்சியளித்தல், மாலை வெண்ணெய் தாழி சேவை, இரவு கருட வாகனத்தில் ராஜாங்க அலங்கார சேவை.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கமல வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

திருச்செந்தூர் சுப்பிரமணியர் காலை தங்க கயிலாய பர்வத வாகனத்தில் புறப்பாடு.

சகல சிவாலயங்களிலும் மாலை வேளையில் நந்தீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை.

மேல்நோக்கு நாள்.

8-ந் தேதி (சனி)

மாத சிவராத்திரி.

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவில் மகா ரதம்.

இளையான்குடி மாறர் குரு பூஜை.

மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ராம அவதாரக் காட்சி, மாலை தவழ்ந்த கண்ணன் அலங்காரம், யானை வாகனத்தில் திருவீதி உலா.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு ரிஷப வாகனத்திலும் பவனி.

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

கீழ்நோக்கு நாள்.

9-ந் தேதி (ஞாயிறு)

அமாவாசை.

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவில் தெப்ப உற்சவம்.

மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ஆண்டாள் திருக்கோலம், மாலை புன்னை மர கிருஷ்ணன், இரவு புஷ்ப தண்டியலில் தவழும் கண்ணன் திருக்கோலக் காட்சி.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் பவனி, மாலை கஜமுக சூரசம்ஹாரம்.

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு காண்பித்தருளல்.

கீழ்நோக்கு நாள்.

10-ந் தேதி (திங்கள்)

திருச்செந்தூர் சுப்பிரமணியர் மஞ்சள் நீராடல்.

மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி புள்ளின் வாய் கிண்டல், இரவு பரமபத நாதர் திருக்கோல காட்சி.

சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

கீழ்நோக்கு நாள்.