இறை நம்பிக்கை


இறை நம்பிக்கை
x
தினத்தந்தி 18 Sep 2018 7:28 AM GMT (Updated: 18 Sep 2018 7:28 AM GMT)

இறைவனிடம் நாம் வைக்கும் நம்பிக்கைக்கு அடிப்படையும் ‘அவர் எப்படிப்பட்டவர்’ என்பதை நாம் அறிந்து கொள்வதில் தான் அடங்கியிருக்கிறது.

தந்தையோடு கடைவீதிக்குச் செல்லும் குழந்தை தந்தையின் சுண்டுவிரலைப் பிடித்துக் கொள்கிறது. அந்த சின்ன ஒரு பற்றுதல் குழந்தைக்கு அதீத நம்பிக்கையைத் தருகிறது. தந்தை தன்னைக் கைவிடமாட்டார், தந்தை தன்னைப் பாதுகாத்துக் கொள்வார் என குழந்தை சந்தேகத்துக்கு இடமின்றி நம்புகிறது. தந்தை மீது அந்த குழந்தை வைக்கும் நம்பிக்கைக்குக் காரணம் என்ன? தந்தையின் சுண்டு விரலின் வலிமையா? இல்லை, குழந்தை தந்தையை அறிந்திருக்கிறது என்பது தான்.

அதே போல தான் இறைவனிடம் நாம் வைக்கும் நம்பிக்கைக்கு அடிப்படையும் ‘அவர் எப்படிப்பட்டவர்’ என்பதை நாம் அறிந்து கொள்வதில் தான் அடங்கியிருக்கிறது. இறைவனின் தன்மைகளை முழுமையாய் அறிந்து கொள்ளாமல் அவர் மீது நம்பிக்கை வைக்க முடியாது. அறிந்து கொள்ளாமல் வைக்கின்ற நம்பிக் கை கள் வலுவிழந்து போய், வாழ்க்கைப் புயலில் சின்னாபின்னமாகி விடும்.

இறைவன் எப்படிப்பட்டவர் என் பதை உணரவேண்டுமெனில் அவரது வார்த்தைகள் எப்படிப்பட்டவை என் பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவருடைய வாக்குறுதிகள் எப்படிப் பட்டவைகள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவரது வார்த்தைகளையும், வாக்குறுதிகளை யும் தாங்கியிருக்கின்ற நூல் தான் விவிலியம். அந்த விவிலியத்தின் வார்த்தைகளை நாம் விளங்கிக் கொள் ளும் போது இறைவனை விளங்கிக் கொள்கிறோம்.

கடவுளுடைய வார்த்தைகள் மாறா தவை. அவருடைய வாக்குறு திகள் மாறாதவை. ஆனால் அவை நமது வாழ்வில் தலைகீழ் மாற்றங்களை ஏற் படுத்தக் கூடிய வலிமை படைத்தவை.

“அவரு சொன்னா சொன்னது தான்” என ஒருவரைப் பற்றி நாம் எப்போது சொல்வோம்? அந்த நபரு டைய குணாதிசயங்கள் எப்படிப் பட்டவை என்பதை அறியும் போது, இல்லையா?. அதே போல தான் இறை வனுடைய வார்த்தைகள் மாறாதவை என்பதைப் புரிந்து கொள்ள அவரு டைய குணாதிசயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

“அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறு கின்றவர்” என இறைவனின் குணாதிசயங்களைப் பற்றி யோவேல் (2:13) நூல் விளக்கு கிறது. அது மட்டுமல்ல நமது வாழ்வில் நாம் இழந்து போனவற்றை மீண்டும் நமக்குத் திரும்பத் தருகிறவர் அவர் என்கிறது விவிலியம்.

“அழித்துவிட்ட பருவப் பலன்களை உங்களுக்கு மீண்டும் தருவேன்”. (யோ வேல் 2:25) என்கிறது யோவேல் நூல்.

இழந்ததை இறைவன் மீண்டும் தருகிறார். இங்கே இழப்பு என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்ததல்ல. வெறும் செல்வம் சார்ந்ததல்ல. மனித வாழ்க்கையை ஒட்டு மொத்தமாய் குறிப்பிடுகிறது. பாவத்தின் கோரக் கரங்களில் சிக்கி நமது வாழ்க்கை அழிவுக்குள் செல்லும் போது, நம்மை மீட்டுக்கொண்டு மீண்டும் நல்வாழ் வைத் தருபவராக இறைவன் பரிமளி க்கிறார்.

“இறைவனிடத்தில் திரளான மீட்பு உண்டு” என விவிலியம் சொல்கிறது. அவரிடத்தில் திரளான செல்வம் உண்டு என சொல்லவில்லை. இறை வனுடைய சிந்தனை மனிதனுடைய மீட்பு என்பதில் தான் அடங்கியிருக்கிறது. இவ்வுலக வாழ்க்கை தற் காலிகமானது. அதன் கவலைகளில் அமிழ்ந்து விடாமல் மீட்பின் வழி களில் நாம் வரவேண்டும் என்பதே இறைவனின் விருப்பம்.

நமது வெற்றிட வாழ்க்கையை, முழுமை யான வாழ்க்கையாய் மாற்ற இறைவனுடைய வார்த்தைகளால் முடியும். “அவருடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் மிக்கது” என்கிறது விவிலியம்.

எகிப்து நாட்டில் அடிமைகளாக உழன்ற எபிரேய மக்களை இறைவன் மீட்டுக் கொண்டு வருகிறார். விடுதலை நாயகனான மோசேக்கு இறைவனின் வார்த்தைகள் தான் வழிகாட்டின. அந்த விடுதலைப் பயணத்தில் மோசேயின் வலிமையாக இருந்தவை இறைவனின் வார்த்தை கள் தான்.

கடவுளுடைய ஆற்றல் இல்லாமை யிலிருந்து நிறைவை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. கடவுளுடைய ஆற்றல் இழந்தவற்றை நமக்கு மீண்டும் திரும்பத் தருகிறது.

இறைவன் நமக்காக மிக உயரிய திட்டங்களை வைத்திருக்கிறார். நாம் அவர் மீது முழுமையான நம்பிக்கை வைக்கும் போது அந்தத் திட்டங்களை அவர் செயல்படுத்துகிறார்.

‘நான் ஒரு முறை லண்டன் செல்ல ஆசைப்படுகிறேன் என்பதற்கும், நான் அடுத்த வாரம் லண்டன் செல்கிறேன் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முதலாவது கூறியது ஆசை, விருப்பம். இரண்டாவது கூறியது வகுக்கப்பட்ட திட்டம். திட்டவட்டமான முன்னேற்பாடு.

நம்முடைய வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கிறது? வெறும் ஆசைகளின் அணிவகுப்பாக இருக்கிறதா? அல்லது தெளிவான திட்டங்களோடு பயணிக்கிறதா?

“இதோ, ஓர் அரசர் நேர்மையுடன் அரசாள்வார்” (எசாயா 32:1) என்கிறது இறை வார்த்தை. இங்கே நேர்மையுடன் அரசாள்வார் என்பது திட்டவட்டமான முன்னேற்பாடு. அது விருப்பம் அல்ல, இறை திட்டம்.

“இறைவனை அன்பு கூர்பவராக, சேர்த்துக் கொள்பவராக, நம்மோடு இருப்பவராக...” (எபிரேயர் 12) பைபிள் சொல்கிறது. இறைவனின் மீது நம்பிக்கை வைப்போம். அதற்கு அவருடைய குணாதிசயங்களைப் புரிந்து கொள்வோம். அதற்காய் இறைவார்த்தையை ஆழமாய் நேசிப்போம்.

Next Story