தற்பெருமை கொள்ளவேண்டாம்...
‘தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம். பெருமையையும் அகந்தையையும் தீய வழியையும் புரட்டு வாயையும் நான் வெறுக்கிறேன்’ (நீதி.8:13)
இயேசு கிறிஸ்துவில் பிரியமான வர்களே, தேவ ஆசீர்வாதத்திற்கு தடையாக இருக்கிற காரியங்களை நாம் வெறுத்தால்; இறைவனுக்கு பிரியமில்லாத காரியங்களை நாம் வெறுத்தால், பரலோகத்தின் ஆசீர் வாதங்களும், பூமியின் ஆசீர்வாதங் களும் நிறைவாக கிடைத்துக் கொண்டே இருக்கும். மனிதனின் தீமையையும், பெருமையையும் தேவன் வெறுக்கிறார்.
இறைவனின் கண்கள் எவ்விடத்தி லுமிருந்து நல்லோரையும் தீயோரையும் பெருமைக்காரரையும் நோக்கி பார்க்கிறது. பணம், அழகு, படிப்பு, அந்தஸ்து இருந்தாலும் ஒன்றும் இல்லாதவனைப் போல் இருக்க வேண்டும். நான் உயர்ந்தவன், நான் பெரியவன், நான் சிறந்தவன் என்று யாரிடமும் பெருமை பேசாதே. ஒரு வருக்கொருவர் கீழ்ப்படிந்து மனத் தாழ்மையை அணிந்து கொள்வதுதான் தேவன் விரும்புவது.
ஏனெனில் ‘மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும் ஜீவிதத்தின் பெருமையும் உலகத்திலிருந்து உண்டா னது. பிதாவிடனிடத்திலிருந்து உண் டாகவில்லை’.
உலகமும் அதன் இச்சையும் ஒழிந்து போகும். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனே என்றென்றைக்கும் நிலைத்து இருப்பான். தன் இருதயத்தில் பெருமையாக பேசி நிர்விசாரத்தோடி ருக்கிற அநேகர் தேவமகிமையை காண்பதில்லை. பெருமையுள்ள வனைப் பார்க்கிலும் பொறுமையுள் ளவன் உத்தமன்.
‘பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையு ள்ளவர்களுக்கோ கிருபை அளிக் கிறார்’ (1 பேதுரு 5:5).
பெருமையுள்ளவர்களுக்கு தேவ கோப ஆக்கினை வருகிறது. பெரு மைக்காரர் அநேகர் விழுந்தார்கள். அவர்களால் எழுந்திருக்க முடியவி ல்லை.
‘நான் இச்சித்தத்தைப் பெற்றுக் கொண்டேன்’ என்று பெருமை பாராட்டி கேடான காரியம் வந்தது. கொள்ளை பொருளால் பெருமை பாராட்டி கொடுமையான தீங்கு வந்தது. எந்த காரியத்திலும் வீணாக பெருமை பாராட்டி வெட்கப்பட்டு போனார்கள்.
வேதத்தில் பலர் பெருமையை தேடி, பொல்லாப்பை பெற்றார்கள், தேவ கிருபையை இழந்து போனார்கள். மனுஷருடைய பெருமையை அடக்குகிறவர் அவரே.
தாழ்மையும், பொறுமையும் உடையவர்களுக்கு தேவ கிருபையை ஊற்று கிறார். அவன் நதி ஓரமாய் நடப்பட்ட மரத்தை போலிருக்கிறான். தன் காலத்தில் தன் கனியைத் தருவது போல் அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். அவன் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும் வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பான். அவன் கை செய்யும் வேலையிலெல்லாம் ஆசீர்வாதத்தை கட்டளையிடுகிறார்.
தாழ்மை உள்ளவர்களை, நதியோரத்திலுள்ள தோட்டங்களை போலவும், கர்த்தர் நாட்டின சந்தன மரங்களைப் போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங் களைப் போலவும் உயர்த்துவார். பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின் மேல் அவனை ஏறி வரப் பண்ணுவார். அவன் இருதயம் மகிழ்ச்சியும், அவன் முகம் பிரகாசமுமாக இருக்கும்.
‘அப்படியே நாவானதும் சிறிய அவ யமாயி ருந்தும் பெருமையானவை களைப் பேசும் பாருங்கள். சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டை கொளுத்திவிடுகிறது’ (யாக்கோபு 3:5)
நாவின் பெருமை நெருப்பை போன்றது. நாவு அநீதி நிறைந்து அநேக பெருமைகளை பேசும். பெரு மையை பேசி முழு சரீரத்தையும் கறைப் படுத்தி விடும். நாவை அடக்க ஒரு மனுஷனாலும் முடியவில்லை. அது அடங்காத பொல்லாத பெருமைகளை பேசி பின்பு இருதயத்தில் வேதனை களை தரும்.
ஒரே நீர் ஊற்றிலிருந்து தித்திப்பும், கசப்புமான தண்ணீர் சுரக்குமா? மாம ரம் பலா பழத்தையும், பலா மரம் மாம் பழத்தையும் கொடுக்குமா? ஒருபோதும் அப்படி ஆகிறதில்லை. ஆனால் நாவானது ஆண்டவருக்கு பிரியமான காரியத்தையும், பின்பு பிரியமில்லாத காரியத்தையும் பேசுகிறது.
பெருமைக்குரிய மகா பெரிய கப்பல்கள் சிறிதான சுக்கானாலே, நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு போகிறது. சிறிய நாவு பெருமையாக பேசி, பெரிய சரீரத்தை கறைப் படுத்துகிறது. குதிரைகளின் வாய்க ளில் கடிவாளம் போட்டு மனிதனுக்கு கீழ்ப்படிகிறது. குதிரைகளை அடக்கும் மனிதனின் நாவு தேவனுக்கு கீழ்ப் படியாமல் பெருமை பேசுகிறது.
கர்த்தர் சமுத்திரத்தை பார்த்து ‘இம் மட்டும் வா, மிஞ்சி வராதே. உன் அலை களின் பெருமை இங்கே அடங்கக் கடவது’ என்றார். சமுத்திரத்தின் அலை அடங்கியது. இயேசு சென்ற படகில் பலத்த சுழல்காற்று உண்டாகி அலைகள் அதின்மேல் மோதியபோது, ‘இரையாதே அமைதலாயிரு’ என்றார். காற்று நின்றுபோய் மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
தன்னை தாழ்த்தி, நாவை அடக்கி பெருமைகளை விட்டு, வேதத்தை படித்து, அதை நேசித்து, அதன்படி ஜீவித்தால் கர்த்தர் என்றென்றைக்கும் துணை நிற்பார். ஆமென்.
ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் ஊ. பூமணி, சென்னை-50.
Related Tags :
Next Story