இந்த வார விசேஷங்கள்


இந்த வார விசேஷங்கள்
x
தினத்தந்தி 2 Oct 2018 8:02 AM GMT (Updated: 2 Oct 2018 8:02 AM GMT)

2-10-2018 முதல் 8-10-2018 வரை

2-ந் தேதி (செவ்வாய்)

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.

சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு.

மேல்நோக்கு நாள்.

3-ந் தேதி (புதன்)

பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

சமநோக்கு நாள்.

4-ந் தேதி (வியாழன்)

குருப்பெயர்ச்சி.

திருப்பதி ஏழுமலையப்பன் கோவிலில் புஷ்பாங்கி சேவை.

திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு கண்டருளல்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.

சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

மேல்நோக்கு நாள்.

5-ந் தேதி (வெள்ளி)

சர்வ ஏகாதசி.

கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

வடலூர் வள்ளலார் பெருமாள் பிறந்தநாள்.

கீழ்நோக்கு நாள்.

6-ந் தேதி (சனி)

சனிப் பிரதோஷம்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.

திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

இன்று அனைத்து சிவன் கோவில்களிலும் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம், ஆராதனை.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோவிலில் சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா.

கீழ்நோக்கு நாள்.

7-ந் தேதி (ஞாயிறு)

மாத சிவராத்திரி.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

திருமயம் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.

இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.

கீழ்நோக்கு நாள்.

8-ந் தேதி (திங்கள்)

மகாளய அமாவாசை.

கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, மாட வீதி புறப்பாடு, மாலை ஊஞ்சல் சேவை.

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருணாச்சல சுவாமிகள் திருவிழா.

இன்று அனைத்து புண்ணிய தலங்களிலும் பிதுர் கடன் இயற்றுதல் நன்மை தரும்.

மேல்நோக்கு நாள்.

Next Story