ஆன்மிகம்

திருமணத்தில் அக்னி வலம் + "||" + In marriage Agni Crawl

திருமணத்தில் அக்னி வலம்

திருமணத்தில் அக்னி வலம்
திருமணத்தின் போது புதுமண தம்பதியினர் அக்னியை 7 முறை சுற்றுவார்கள். இந்த சடங்கை நமது முன்னோர்கள் எதற்காக செய்தார்கள் என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. வாழையடி வாழையாக நாம் இந்த சடங்கை செய்து வருகிறோம்.
மணமக்கள் அக்னியை 7 முறை வலம் வருவது ஏன் என்று தெரிந்து கொள்வோம்.

முதல் அடி - பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாம் அடி- ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

மூன்றாம் அடி- நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

நான்காவது அடி- சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடி- லட்சுமி கடாட்சம் நிறைந்து பெற வேண்டும்.

ஆறாவது அடி- நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

ஏழாவது அடி- தர்மங்கள் நிலைக்க வேண்டும்.