ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் : 12-3-2019 முதல் 18-3-2019 வரை + "||" + This week's specials: 12-3-2019 to 18-3-2019

இந்த வார விசேஷங்கள் : 12-3-2019 முதல் 18-3-2019 வரை

இந்த வார விசேஷங்கள் : 12-3-2019 முதல் 18-3-2019 வரை
12-ந் தேதி (செவ்வாய்) கார்த்திகை விரதம். சஷ்டி விரதம்.பழனி, குன்றக்குடி, மதுரை, சுவாமிமலை, திருப்பரங்குன்றம் தலங்களில் பங்குனி உத்திர உற்சவம் ஆரம்பம்.
திருச்சிமலை, கழுகுமலை, திருவாரூர், கங்கைகொண்டான், திருச்சுழி, காஞ்சீ புரம், திருப்புவனம் ஆகிய தலங்களில் சிவபெருமான் உற்சவம் தொடக்கம்.

மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை கிருஷ்ண அவதார காட்சி, இரவு சேஷ வாகனத்தில் வீதி உலா.

கீழ்நோக்கு நாள்.

13-ந் தேதி (புதன்)

முகூர்த்த நாள்.

பாளையங்கோட்டை கோபாலசுவாமி கோவிலில் பங்குனி உற்சவம்.

திருச்சி தாயுமானவர் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.

காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் வீதி உலா.

திருப்புவனம் ஜெகநாத பெருமாள், பரமக்குடி முத்தாலம்மன் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.

மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.

திருநெல்வேலி நெல்லையப்பர் பவனி.

மேல்நோக்கு நாள்.

14-ந் தேதி (வியாழன்)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் வேணுவன லிங்கேஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி.

கழுகுமலை முருகப்பெருமான் காலை புஷ்பக விமானத்திலும், இரவு அன்ன வாகனத்திலும் திரு வீதி உலா.

பரமக்குடி முத்தாலம்மன் கிளி வாகனத்தில் பவனி.

ராமகிரிபேட்டை கல்யாண நரசிங்கப் பெருமாள் ஆலய உற்சவம் ஆரம்பம்.

சமநோக்கு நாள்.

15-ந் தேதி (வெள்ளி)

காரடையான் நோன்பு

நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி.

மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆண்டாள் திருக்கோலமாய் காட்சியளித்தல்.

நத்தம் மாரியம்மன் ஆலயத்தில் பால் காவடி உற்சவம்.

ராமகிரிபேட்டை கல்யாண நரசிங்கப்பெருமாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் அனுமன் வாகனத்தில் வீதி உலா.

மேல்நோக்கு நாள்.

16-ந் தேதி (சனி)

திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் ஆலயத்தில் கருட சேவை.

மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம், இரவு பூப்பல்லக்கில் பவனி.

பரமக்குடி முத்தாலம்மன் விருட்ச வாகனத்தில் வீதி உலா.

திருச்சி தாயுமானவர் வெள்ளி விருட்ச சேவை.

கழுகுமலை முருகப்பெருமான் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு மயில் வாகனத்திலும் உலா வருதல்.

சமநோக்கு நாள்.

17-ந் தேதி (ஞாயிறு)

முகூர்த்த நாள்.

சர்வ ஏகாதசி.

நாங்குநேரி வானமாமலை பெருமாள் மாலை தங்கச் சப்பரத்திலும், இரவு கண்ணாடி சப்பரத்திலும் பவனி.

திருச்சுழி திருமேனிநாதர் விருட்ச வாகனத்திலும் உலா, ஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு.

கழுகுமலை முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சப்பரத்திலும் பவனி.

மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் பவனி.

மேல்நோக்கு நாள்.

18-ந் தேதி (திங்கள்)

பிரதோஷம்.

காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயங்களில் ரத உற்சவம்.

திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாளுக்கு காலை திருக்கல்யாண உற்சவம், இரவு யானை வாகனத்தில் சுவாமி பவனி.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா.

அனைத்து சிவாலயங்களிலும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.

கீழ்நோக்கு நாள்.