ஆன்மிகம்

செவ்வாய் தரும் ருச்சக யோகம் + "||" + Ruchaga yogam

செவ்வாய் தரும் ருச்சக யோகம்

செவ்வாய் தரும் ருச்சக யோகம்
ஒருவரது சுய ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 1,4,7,10 ஆகிய இடங்களில் `மங்களன்’ என்ற செவ்வாய் கிரகம் ஆட்சி, உச்சம் பெற்று அமைவதால் `ருச்சக யோகம்’ ஏற்படுகிறது.
ருச்சக யோகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாயின் பிரதான காரகத்துவமான பூமி யோகம் இயற்கையாகவே அமைந்திருக்கும். பூமி அல்லது நிலம் மூலம் பல்வேறு லாபங்கள் ஏற்படும். இவர்கள் இளமையாகவும், அழகாகவும் இருப்பார்கள். ஆன்மிகம் மற்றும் தெய்வ நம்பிக்கையில் அசையாத உறுதி கொண்டவர்கள். இவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு இருக்கும்.

செவ்வாய் கிரகம், வீரம் மற்றும் ரத்தம் ஆகியவற்றுக்கும் காரகன் என்ற நிலையில் மன தைரியத்திற்கும், அண்ணன்-தம்பிகள், சகோதர-சகோதரிகள் பாசம் ஆகியவற்றுக்கு இந்த அமைப்பு அவசியம். ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றவர் களுக்கு, தனது உயிரையே கொடுக்கும் நண்பர்கள் இருப்பார்கள். ராணுவம், போலீஸ் துறையில் இருப்பவர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கும். யாரைப்பற்றியும் அஞ்சாமல் கேள்வி கேட்கும் மன தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள். அரசியலில் பெரிய பதவிகள் தேடி வரும். உடன் பிறந்த சகோதரர் மற்றும் பங்காளிகள் ஆகியோரது ஆதரவு பக்கபலமாக இருக்கும். மருத்துவத் துறையில் நற்பெயர் எடுப்பதற்கு ருச்சக யோகம் பெரிதும் துணையாக இருக்கும்.