ராஜ வாழ்வு அளிக்கும் சாமர யோகங்கள்


ராஜ வாழ்வு அளிக்கும் சாமர யோகங்கள்
x
தினத்தந்தி 3 May 2019 3:19 AM GMT (Updated: 2019-05-03T08:49:27+05:30)

சிறப்பான யோகங்களில் சாமர யோகம் மற்றும் வெண்சாமர யோகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை

யோகங்களில் சாமர யோகம் மற்றும் வெண்சாமர யோகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். பிறவியிலேயே அதிர்ஷ்டம் பெற்றவர்களுக்கு அவரது முயற்சி என்பது குறைவாக உள்ள சூழ்நிலையிலும் புகழ், பதவி, செல்வம் போன்றவை தாமாக அவருக்கு கிடைக்கின்றன. அவ்வாறு அதிர்ஷ்டம் அளிக்கும் யோகங்களில் சாமர யோகம் மற்றும் வெண்சாமர யோகம் ஆகியவை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

ஒருவர் பிறந்த லக்னத்தின் அதிபதி, 1,4,7,10 ஆகிய கேந்திரங்களில் உச்சம் பெற்று அமர்ந்து, அதை குரு பார்வையிடும் நிலை சாமர யோகம் ஆகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் சிறந்த குலத்தில் பிறந்து வேகமாக முன்னேறுவார்கள். ஆன்மிக ரீதியான வளர்ச்சிகளையும் அடைவார்கள். அரசின் உயர்ந்த பதவி அவரைத் தேடி வரும். சமூகத்தில், செல்வாக்கும் பாராட்டும் பெறுவார்கள்.

ஒருவரது சுய ஜாதகத்தில் எந்த ஒரு ராசியிலும் சூரியன் இருக்க, அந்த ராசிக்கு முன்பும், பின்பும் உள்ள ராசிகளில் குரு, சுக்ரன், புதன் போன்ற சுபக் கிரகங்கள் அமர்ந்திருப்பது வெண்சாமர யோகம் ஆகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அரச பரம்பரையினராக இருப்பார்கள் என்பது ஜோதிட நம்பிக்கையாக உள்ளது. வெண்சாமர யோகத்தில் பிறந்தவர்களுக்கு அவரது தேவைகள் எல்லா காலங்களிலும் பூர்த்தி செய்யப்படும் அதிர்ஷ்டம் உடையவர்கள்.

பொருளாதார நிலையில் இவர்களுக்கு குறைவிருக்காது. எந்த ஒரு துறையிலும் கடின உழைப்பால் விரைவில் உயர் பதவிகளை அடைவார்கள். நல்ல நிர்வாகத் திறம் உள்ள இவர்களைப் புகழ்ந்து பேசி, ஆதாயம் பெறுபவர்கள் இவர்களைச் சுற்றி இருப்பார்கள்.

Next Story