இந்த வார விசேஷங்கள்


இந்த வார விசேஷங்கள்
x
தினத்தந்தி 14 May 2019 10:15 AM GMT (Updated: 14 May 2019 10:15 AM GMT)

14-5-2019 முதல் 20-5-2019 வரை இந்த வார விசேஷங்கள்

14-ந் தேதி (செவ்வாய்)

*வாசவி ஜெயந்தி.
*நாங்குநேரி உலகநாயகி அம்மன் புஷ்பாஞ்சலி.
*மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் பவனி.
*திருநெல்வேலி நெல்லையப்பர்- 
காந்திமதி அம்மன் ஆலயத்தில் வருசாபிஷேகம்.
*காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் உற்சவம், 
வெள்ளி சிம்மாசனத்தில் அம்மன் வீதி உலா.
*வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா.
*குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு கண்டருளல்.
*திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் காலை காலிங்க நர்த்தனம்,
மாலை வேணு கோபாலர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
*கீழ்நோக்கு நாள்.

15-ந் தேதி (புதன்)

*சர்வ ஏகாதசி.
*சமயபுரம் மாரியம்மன் பஞ்சப் பிரகாரம்.
*காளையார்கோவில் சிவபெருமான்,
பொய்பிள்ளையை மெய்பிள்ளை ஆக்குதல்,
இரவு வெள்ளி விருட்ச சேவை.
*உத்தமர்கோவில் சிவபெருமான் திருக்கல்யாணம்,
இரவு புஷ்ப விமானத்தில் பவனி.
*வீரபாண்டி கவுமாரியம்மன் விடையாற்று உற்சவம்.
*காஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமான் கோவிலில் ரதம்.
*அரியக்குடி சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்.
*சமநோக்கு நாள்.

16-ந் தேதி (வியாழன்)

*முகூர்த்த நாள்.
*பிரதோஷம்.
*ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், அப்பன் சன்னிதிக்கு எழுந்தருளி, 
தவழும் கண்ணன் திருக்கோலமாய் காட்சி அளித்தல்.
*பழனி பாலதண்டாயுதபாணி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
*காட்டுபரூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாண வைபவம்.
*காரைக்குடி கொப்புடைய நாயகி அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
*நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி காலை பல்லக்கிலும்,
இரவு அன்ன வாகனத்திலும் வீதி உலா.
*சமநோக்கு நாள்.

17-ந் தேதி (வெள்ளி)

*முகூர்த்த நாள்.
*நரசிம்மர் ஜெயந்தி.
*மாயவரம் கவுரிமாயூரநாதர், திருவாடானை ஆதிரத்தினேஸ்வரா், 
நயினார்கோவில் நாகநாதர், திருப்பத்தூர்
திருத்தணிநாதர், உத்தமர் கோவில்,
திருப்புகளூர், காளையார்கோவில் ஆகிய தலங்களில் ரதம் உலா.
*பழனி முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம்.
*திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள், வெண்ணெய் தாழி சேவை.
*ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கோ ரதம்,
இரவு புஷ்பப் பல்லக்கில் தவழும் கண்ணன் திருக்கோலம்.
*சமநோக்கு நாள்.

18-ந் தேதி (சனி)

*வைகாசி விசாகம்.
*பவுர்ணமி.
*திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பால்குடக் காட்சி.
*திருமோகூர் காளமேகப் பெருமாள்,
திருக்கண்ண புரம் சவுரிராஜப் பெருமாள், 
அரியக்குடி சீனிவாசப் பெருமாள், காட்டுபரூர் ஆதிகேசவப்பெருமாள்,
நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி,
பழனி முருகப்பெருமான் ஆலயங்களில் ரதம் வீதி உலா.
*திருப்பத்தூர் திருத்தணி நாதர் ஆலயத்தில் தெப்ப உற்சவம்.
*கீழ்நோக்கு நாள்.

19-ந் தேதி (ஞாயிறு)

*மதுரை கூடலழகர் கோவிலில் ரத ஊர்வலம்,
இரவு தங்க சீவிகையில் சுவாமி பவனி.
*காஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம்.
*காட்டுபரூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்.
*நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன்
வெள்ளிக் குதிரையில் வீதி உலா.
*திருமோகூர் காளமேகப் பெருமாள் புஷ்ப விமானத்தில் பவனி.
*சமநோக்கு நாள்.

20-ந் தேதி (திங்கள்)

*திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் கோவிலில்
விடையாற்று உற்சவம்.
சுவாமிக்கு திருமஞ்சன சேவை.
*அரியக்குடி சீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி.
*தர்மபுரி ஞானபுரீஸ்வரர் திருக்கல்யாண வைபவம்,
புஷ்பக விமானத்தில் சுவாமி வீதி உலா.
*காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன்
வெள்ளிக் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
*சமநோக்கு நாள்.


Next Story