ஆன்மிகம்

தொழிலதிபர்களை உருவாக்கும் ஜெய யோகம் + "||" + Jaya Yogam is Creating Entrepreneurs

தொழிலதிபர்களை உருவாக்கும் ஜெய யோகம்

தொழிலதிபர்களை உருவாக்கும் ஜெய யோகம்
ஜெய யோகம் என்பது ஒருவரது சுய ஜாதகத்தின் ஆறாம் வீட்டில் உள்ள கிரகம் நீச்சம் பெற்றதாகவும், பத்தாம் வீட்டில் உள்ள கிரகம் உச்சம் பெற்றதாகவும் அமர்ந்துள்ள நிலையில் ஏற்படுவதாகும்.
இந்த யோகத்தில் பிறந்தவர்கள் வலிமையான உடல் அமைப்பை பெற்றிருப்பார்கள். மற்றவர்கள் மதிக்கும்படியான கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். பெற்றோர்களை மதித்து நடப்பதுடன், அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நடந்து கொள்வார்கள். 

அரசாங்கம், ராணுவம் போன்ற துறைகளில் உயர் பதவிகளை குறுகிய காலத்திலேயே அடையும் திறமை இவர்களுக்கு இருக்கும். எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டாலும், அதை விரைவில் வட்டியுடன் திருப்பி அடைத்து விடுவார்கள். எதிரிகள் இவர்களிடம் நேரடியாக மோதாமல் மறைமுகமாக மோதுவார்கள். 

பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ள கிரகத்தின் உச்ச நிலை காரணமாக, பெரும் தொழிலதிபர்களாக இருப்பார்கள். அரசாங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை அளிக்கும் அளவிற்கு தொழிலில் சிறப்பான அனுபவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த யோகத்தில் பிறந்த சிலருக்கு திருமணத்திற்கு பின்னர் யோகமான வாழ்க்கை அமைவதாக ஜோதிட வல்லுனர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பூமி லாபம் தரும் கேதார யோகம்
ஜோதிடம் குறிப்பிடும் அபூர்வமான யோகங்களில் ஒன்று கேதார யோகம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் மிகவும் குறைவான சதவீத எண்ணிக்கையில்தான் இந்த யோகம் அமையும் என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும்.
2. வீதியை ஜொலிக்க வைக்கும் விளக்கு பூஜை
தங்களுக்கு பெரும் துன்பத்தை விளைவித்து வந்த அசுரர்களை அழிப்பதற்காக, சிவபெருமானை நாடிச் சென்றனர் தேவர்கள்.
3. இந்த வார விசேஷங்கள் : 29-1-2019 முதல் 4-2-2019 வரை
29-ந் தேதி (செவ்வாய்) சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.